தமிழ்நாடு

தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் அழகிரிசாமி மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் அழகிரிசாமி அவர்களின் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் அழகிரிசாமி மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் அழகிரிசாமி அவர்களின் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “முன்னாள் தலைமை நீதிபதி வீராசாமி அவர்களின் மருமகனும் தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான அழகிரிசாமி அவர்கள் திடீரென மறைந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனைக்கு உள்ளானேன்.

அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதித்துறையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்; அனைவருக்கும் நீதி கிடைக்கப் பாடுபட்ட அழகிரிசாமி அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்.

இவரது மாமனார் வீராசாமி அவர்கள், நெருக்கடி நிலை அமலில் இருந்த நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக - ஜனநாயகத்தின் பக்கம் உறுதியாக நின்றவர்.

தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் அழகிரிசாமி மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கழக ஆட்சியில் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அழகிரிசாமி அவர்கள், கழக அரசுக்கு முக்கிய வழக்குகளில் சட்ட நுணுக்கங்கள் நிறைந்த ஆலோசனைகளை அளித்தவர். வழக்குகளில் ஆழமான ஆணித்தரமான சட்ட கருத்துக்களை மேற்கோள்காட்டி வாதிடும் திறமை படைத்த அவரின் மறைவு நீதித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு.

அழகிரிசாமி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் சக வழக்கறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories