தமிழ்நாடு

“மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது” : மீண்டும் சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா!

“மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது” என மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனேடிவாலா மற்றுமொரு சர்ச்சை தீர்ப்பை வழங்கியுள்ளார்.

“மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது” : மீண்டும் சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், பெண்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இருந்து நீதிமன்றங்கள் தவறுகின்றனவா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

குறிப்பாக பெண் நீதிபதி ஒருவரின் தொடர் தீர்ப்புகள் பெண்கள் மீதான வன்முறைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில், நீதிபதியாக புஷ்பா கனேடிவாலா பணியாற்றி வருகிறார்.

இவரது சமீபத்தின் தீர்ப்புகள் மூலம் பேசுபொருளாக மாறியுள்ளார். குடும்ப வன்முறை, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக நிற்காமல் அவர்களுக்கு எதிரான தவறான தீர்ப்பை வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் இந்த நீதிபதி. அப்படி கடந்தவாரம் பெண்களுக்கு எதிராக சர்ச்சை தீர்ப்பை ஒன்றை வழங்கி வழங்கினார்.

“மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது” : மீண்டும் சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா!

அதில், “பாலியல் நோக்கத்துடன் ஒருவரை தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை; விருப்பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்கு கீழ் வராது; ஆடையின் மேல் அத்துமீறித் தடவுவது பாலியல் வன்முறை அல்லது அத்துமீறலில் வராது” என்று தீர்ப்பளித்துள்ளார்.

இப்படி ஒரு தீர்ப்பை வழங்கிய நீதிபதி புஷ்பா கனேடிவாலாவுக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த தீர்ப்பை, உச்சநீதிமன்றம் தலையிட்டு தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், குழந்தைகள் வன்முறை தொடர்பான மற்றொரு வழக்கிலும் நீதிபதி புஷ்பா கனேடிவாலா, சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், ஒருவர் சிறுமியின் கைகளைப் பிடிப்பதும், பேண்ட் ஜிப்பை திறப்பதும் போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் குற்றத்தில் வராது என்று தீர்ப்பளித்துள்ளார்.

“மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது” : மீண்டும் சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா!

மேலும், போக்சோ சட்டப் பிரிவு 8 மற்றும் 10-இன் கீழ் 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வேண்டியதை, நீதிபதி புஷ்பா, பாலியல் துன்புறுத்தல் என்ற பிரிவு 12-க்கு மாற்றி, 3 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை கிடைக்க வழி செய்துள்ளார்.

இந்நிலையில், மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என நீதிபதி புஷ்பா மற்றுமொரு சர்ச்சை தீர்ப்பை வழங்கியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் ஜாரே என்பவர் திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் 2004ல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து ஜாரேவுக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாரே வழக்கு தொடர்ந்தனர்.

“மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது” : மீண்டும் சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா!

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா கனேடிவாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி புஷ்பா கனேடிவாலா, “ 'ஐபிசி பிரிவு 498ன் படி, மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது” எனத் தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழங்கில் ஜாரே மகள் வாக்குமூலம் அளித்தும் போலிஸார் தற்கொலை என வழக்குப் பதிந்தது ஆச்சரியமளிக்கிறது” என கருத்துத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த வழக்கின் போது ஜாரேவின் மகள், தனது தாயை அடித்து, துன்புறுத்தி வலுக்கட்டாயமாக விஷமருந்தச் செய்ததாக வாக்குமூலம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories