தமிழ்நாடு

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு வலுசேர்க்க சென்னையில் விவசாயிகள் தொடர்போராட்டம்!

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு காத்திருப்புப் போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறுகிறது.

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு வலுசேர்க்க சென்னையில் விவசாயிகள் தொடர்போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 40 நாட்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, போராட்டத்திற்கு வலுசேர்த்திடவும், தமிழக விவசாயிகளின் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையிலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு காத்திருப்புப் போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறுகிறது.

இந்தப் போராட்டத்தை வாழ்த்தி தி.மு.க அமைப்பு செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மார்க்சிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழு செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழு செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளர்மல்லை சத்யா, மனித நேயமக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது, எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழ் நாடு தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் பங்கேற்று மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

மாநில முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.

banner

Related Stories

Related Stories