தமிழ்நாடு

“தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தனி அமைப்பு உருவாக்கப்படும்” : மு.க.ஸ்டாலின் !

“தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தனி அமைப்பு உருவாக்கப்படும்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தனி அமைப்பு உருவாக்கப்படும்” : மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அ.தி.மு.கவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன்படி இன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வலங்கைமான் ஒன்றியம், அவளிவநல்லூர் ஊராட்சியில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு மக்களிடம் எழுச்சியுரையாற்றினார்.

அப்போது பேசி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது தலைவர் கலைஞர் ஆட்சிதான். தேர்தலுக்கு முன்பு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வேன் என வாக்குறுதி கொடுத்தார் கலைஞர். பின்னர் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, தலைவர் கலைஞர் பதவி பிரமாணம் எடுத்து கொண்டபோதே அங்கையே அமர்ந்து 7,000 கோடி கடனை ரத்து செய்வதாக அறிவித்தார். கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சியினருக்கும், அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி கொடுத்தார் தலைவர் கலைஞர்.

“தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தனி அமைப்பு உருவாக்கப்படும்” : மு.க.ஸ்டாலின் !

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரியும், அதனை எதிர்த்தும் பா.ஜ.க தவிர அனைத்து மாநில முதல்வர்களும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆனால், எடப்பாடியோ ஆதரவு தெரிவித்து பேசி வருகிறார். விவசாயிகளுக்கு துரோகம் செய்யயும் இந்த ஆட்சி இருந்து என்ன பயன்?

முன்னதாக, உள்ளாட்சி அமைப்புகளில் 39% இட ஒதுக்கீடு, பெண்கள் சுய தொழில் செய்ய, மகளிர் சுய உதவிக்குழு திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி திட்டம் உட்பட பல திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர். எனவே, தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தனி அமைப்பு உருவாக்கப்படும்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதால் முதல்வர் பழனிசாமி மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் அவர்களால் முடிந்தவரை இப்போதே மக்கள் பணத்தை சுரண்டிக் கொள்ளலாம் என ஈடுபட்டுள்ளனர். எனவே இன்னும் நான்கு மாதங்களில் நீங்களே ஊழல் அ.தி.மு.கவை விரட்டியடிக்க தயாராக இருப்பீர்கள்! இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது. ஆட்சி மாற்றத்திற்கு நான் ரெடி.. நீங்க ரெடியா?” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories