தமிழ்நாடு

“மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கப்போவது இப்போதே எழுதப்பட்ட வரலாறு” - வைகோ உறுதி!

வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றி பெறும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

“மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கப்போவது இப்போதே எழுதப்பட்ட வரலாறு” - வைகோ உறுதி!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அரசு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சென்னை எழும்பூரில் உள்ள தனியார் அரங்கில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“வரும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க கடந்த 2 மாதங்களாக தேர்தல் ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஆனால் நேற்று தேர்தல் ஆணைய அதிகாரி வாக்குச்சாவடிகளை அதிகரிக்கப் போகிறோம் என்று கூறுகிறார். இது நாங்கள் செய்த வேலையை மீண்டும் செய்யவேண்டிய நிலைமையை உருவாக்கியுள்ளது.

வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கப்போவது இப்போதே எழுதப்பட்ட வரலாறாக பலராலும் பார்க்கப்படுகிறது. தனிப் பெரும்பான்மையுடன் தி.மு.க வெல்லும்.

விவசாயிகளை அடியோடு அழிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு நீக்க வேண்டும். இந்தச் சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொருட்களை பதுக்கி வைத்து தேவைப்பட்ட நேரத்தில் விலையேற்றம் செய்து பொருட்களை விற்பனை செய்யும். நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் முடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. துணை முதல்வரே அந்த ஆணையத்தில் ஆஜர் ஆகாதது இந்த கமிஷன் ஏன் அமைத்தார்கள் என்று கேள்வியை எழுப்புகிறது. நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அரசு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories