தமிழ்நாடு

“சர்வாதிகாரப் போக்கில் செல்லும் அ.தி.மு.க, தேர்தலின் மூலம் சரியான பாடத்தை கற்கும்” : ஈ.ஆர்.ஈஸ்வரன் சாடல்!

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தன்மானம் இல்லாத கட்சியாக அ.தி.மு.கவை மாற்றி விட்டார்கள் என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

“சர்வாதிகாரப் போக்கில் செல்லும் அ.தி.மு.க, தேர்தலின் மூலம் சரியான பாடத்தை கற்கும்” : ஈ.ஆர்.ஈஸ்வரன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “தமிழத்தில் உள்ள அமைச்சர்கள் குறுநில மன்னர்களைப் போல் செயல்பட்டு வருகின்றனர்.

அந்தந்த மாவட்டத்தை அமைச்சர் தான் ஆளவேண்டும் என நினைக்கிறார்கள். வேறு யாரும் அரசியல் செய்யக் கூடாது என்ற நிலையில் இருந்து வருகின்றனர். ஆட்சி அதிகாரம் இருப்பதால் தங்களை மீறி எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அ.தி.மு.கவினர் உள்ளனர்.

தி.மு.க மக்களை சந்திக்கும் மக்கள் சபைக் கூட்டத்திற்கு உள்ளாட்சித் துறையை வைத்து எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ஏற்புடையது அல்ல. ஆளும் கட்சிதான் அரசியல் கூட்டம் நடத்த வேண்டுமா? சர்வாதிகார போக்கில் சென்று கொண்டிருக்கும் அ.தி.மு.கவினருக்கு தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள்.

“சர்வாதிகாரப் போக்கில் செல்லும் அ.தி.மு.க, தேர்தலின் மூலம் சரியான பாடத்தை கற்கும்” : ஈ.ஆர்.ஈஸ்வரன் சாடல்!

முதல்வர், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறையில் வெளிப்படையான ஒப்பந்தம் தான் நடக்கிறது. இணையதளம் மூலம் எந்த தவறும் இல்லாமல் ஒப்பந்தம் நடைபெறுகிறது என பச்சைப் பொய் கூறி வருகிறார். ஒப்பந்தத்தில் என்ன நடக்கும்? எப்படி நடக்கிறது என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. இதுபற்றி முதல்வர் கருத்து எதுவும் கூறாமல் இருந்திருக்கலாம். அதை விடுத்து பள்ளி செல்லும் குழந்தை போல பேசுவதா? முதல்வர் மக்களை ஏமாளியாக்க நினைக்கிறார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தன்மானம் இல்லாத கட்சியாக அ.தி.மு.கவை மாற்றி விட்டார்கள். அ.தி.மு.கதான் பா.ஜ.கவுடன் கூட்டணி எனச் சொல்கிறது. ஆனால், பா.ஜ.க கூட்டணிக்கு இதுவரை வெளிப்படையாக சம்மதிக்கவில்லை. 2016ல் அ.தி.மு.கவின் கூட்டணிக்கு பா.ஜ.க ஏங்கியது. மோடியா, லேடியா எனச் சொன்னார் ஜெயலலிதா. அந்த நிலை மாறி அரசு விழாவில் கூட்டணி தொடரும் என தெரிவிக்கும் நிலையில் உள்ளது தற்போதைய அ.தி.மு.க.

ஜெயலலிதா இருக்கும்போது டெல்லியில் இருந்து யார் வந்தாலும் ஜெயலலிதாவை சென்று சந்திப்பது வழக்கம், ஆனால், தற்போது, மத்திய அமைச்சரை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் இருவரும் விமான நிலையத்திற்கு ஓடோடிச் சென்று காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது நல்ல கட்சிக்கு மரியாதையானது அல்ல. ” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories