தமிழ்நாடு

“தமிழகத்தில் அடுத்து தி.மு.க ஆட்சிதான்.. தி.மு.க குறி தப்பாது என்பதை நிரூபிக்க வேண்டும்”: மு.க.ஸ்டாலின் !

“நான் என்பதை விடுங்கள்; நாம் என்று மாறினால் தான் நிச்சயம் வெற்றி பெற முடியும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

“தமிழகத்தில் அடுத்து தி.மு.க ஆட்சிதான்.. தி.மு.க குறி தப்பாது என்பதை நிரூபிக்க வேண்டும்”: மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி, தி.மு.க நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் நடைபெறவிருக்கு 2021 சட்டமன்ற தேர்தல் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டிசம்பர் 23ம் தேதி முதல் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி தேர்தல் பிரச்சாரம் செல்ல உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

பின்னர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கொரோனா காலத்திலும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தி.மு.க செய்தது. அ.தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். இந்த சூழலில், மிக முக்கியமான காலக்கட்டத்தில் இந்த கூட்டத்தை நாம் நடத்தி வருகிறோம்.

“தமிழகத்தில் அடுத்து தி.மு.க ஆட்சிதான்.. தி.மு.க குறி தப்பாது என்பதை நிரூபிக்க வேண்டும்”: மு.க.ஸ்டாலின் !

கடந்த 1971ம் ஆண்டு கலைஞர் தலைமையில் 184 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்ற சரித்திர சாதனையை வரும் தேர்தலில் நாம் அடைய வேண்டும். அதுமட்டுமல்லாது, இந்த தேர்தலில் நாம் அடையவிருக்கிற வெற்றி என்பது, நாம் முன்னர் ஐந்து முறை பெற்றுள்ள வெற்றிக்கு சமம் ஆகும்.

மத்தியில் பா.ஜ.க ஆட்சியின் அதிகார பலம் ; மாநிலத்தில் அ.தி.மு.க ஆட்சி அதன் பண பலம். பணத்தை வெல்லும் ஆற்றலை மக்களுக்கு உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும். அ.தி.மு.கவுக்கு வாக்களிப்பது அவமானம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தி.மு.கவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க பல முனைகளில் சதி நடக்கிறது.

வரும் தேர்தலில் தமிழகத்தில் அடுத்து தி.மு.க ஆட்சிதான் அமையும். அந்த வெற்றியை எளிதில் பெற விட மாட்டார்கள். அர்ச்சுனன் குறி போல், தி.மு.க குறி தப்பாது என்பதை நிரூபிக்க வேண்டும். அ.தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

“தமிழகத்தில் அடுத்து தி.மு.க ஆட்சிதான்.. தி.மு.க குறி தப்பாது என்பதை நிரூபிக்க வேண்டும்”: மு.க.ஸ்டாலின் !

இந்த சூழலில் நம்மை தாண்டி நம்மிடம் இரண்டு பலம் உள்ளது. ஒன்று அண்ணா, மற்றொன்று கலைஞர். எனவே தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதே நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

பெரும்பான்மைக்கு தேவையான 117 இடங்களை வெல்வதல்ல நமது குறிக்கோள், நம்முடைய இலக்கு 200 தொகுதிக்கு மேல் இருக்கவேண்டும். இதற்கு ஒரு இன்ச் கூட குறையக்கூடாது. நான் என்பதை விடுங்கள்; நாம் என்று மாறினால் தான் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

அதிலும் குறிப்பாக தி.மு.கவினர் முழு சக்தியை கொடுத்தால் மட்டுமே வெற்றிப்பெற முடியும். எந்த தொகுதியில் தி.மு.க போட்டியிட்டாலும் உதய சூரியன் தான் வேட்பாளர், கலைஞர் தான் வேட்பாளர். விரைவில் தேர்தல் வர உள்ளதாக தகவல் வருகிறது. இதனால், விரைவில் தேர்தல் பிரசாரத்தை துவக்குவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories