தமிழ்நாடு

“டிச.23 முதல் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி பிரச்சாரம் செய்வார்” : பொதுச் செயலாளர் துரைமுருகன்!

தமிழகம் முழுவதும் டிச.23 முதல் ஜன.10ம் தேதி வரை சுமார் 16,000 கிராம சபைக் கூட்டங்களை நடத்தவுள்ளதாக தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கழக வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு.
கழக வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு.
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி, தி.மு.க நிர்வாகிகள் என பலர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறவிருக்கு 2021 சட்டமன்ற தேர்தல் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டிசம்பர் 23ம் தேதி முதல் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி தேர்தல் பிரச்சாரம் செல்ல உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மேலும், டிசம்பர் 23 முதல் ஜனவரி 10 வரை 16,000 கிராம சபை கூட்டங்ளை மீண்டும் தி.மு.க நடத்த உள்ளதாகவும், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒவ்வொரு வார்டாக சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“டிச.23 முதல் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி பிரச்சாரம் செய்வார்” : பொதுச் செயலாளர் துரைமுருகன்!

பின்னர், “அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்” என்ற தலைப்பில் தி.மு.கவின் பிரச்சார வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் 0 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் குறைகளை எடுத்துரைத்தும்,

“தமிழகத்தின் புதிய விடியலுக்கு நாம் ஒன்றிணைவோம்!” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளது படி தேர்தல் பரப்புரை வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories