தமிழ்நாடு

“சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை” : பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை” : பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சின்னத்திரையில், தொகுப்பாளராக அறிமுகமாகி தனது பயணத்தைத் தொடர்ந்த சித்ரா, தொடர்சியாக பல்வேறு சீரியல்களில் நடித்துவந்தவர். தற்போது விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகிவரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வருகிறார்.

சித்ராவிற்கு வரும் ஜனவரி மாதம் ஹேமந்த் என்பவருடம் திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ஹேமந்த்துடன் தங்கி இருந்து படப்பிட்டிப்பில் ஈடுபட்டுவந்த சித்ரா, நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதுகுறித்து ஹேமந்த்கூறுகையில், ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படப்பிடிப்பு முடித்துவிட்டு ஓட்டலுக்கு வந்த சித்ரா, தான் குளிக்கச் செல்வதாக கூறி அறைக்கு வெளியே செல்ல கூறியதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாகவும் ஹேமநாத் தெரிவித்துள்ளார்.

“சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை” : பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி!

மேலும், சித்ரா கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் கூறி மாற்று சாவியை எடுத்து வந்து திறந்த போது அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ரா தற்கொலை சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் சித்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories