தமிழ்நாடு

தி.மு.க-வின் முன்னோடிகளில் ஒருவரும், மொழிப்போர் தியாகியுமான அக்கினிராசு காலமானார்!

தி.மு.க-வின் முன்னோடிகளில் ஒருவரும், மொழிப்போர் தியாகியுமான அக்கினிராசு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்!

தி.மு.க-வின் முன்னோடிகளில் ஒருவரும், மொழிப்போர் தியாகியுமான அக்கினிராசு காலமானார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க முன்னோடியும் முன்னாள் எம்.பியுமான அக்கினிராசு (87) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தி.மு.கழகத்தின் மொழிப்போர் தியாகியான அக்கினிராசு, சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க மாவட்ட செயலாளர், ராஜ்யசபா எம்.பி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

தமிழகத்தில் 1964 ஆம் ஆண்டு ஆட்சிமொழி சட்டப்பிரிவின் நகலை எரித்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஐவர் குழுவில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

தி.மு.க-வின் முன்னோடிகளில் ஒருவரும், மொழிப்போர் தியாகியுமான அக்கினிராசு காலமானார்!

மறைந்த அக்கினிராசு அவர்களுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் நான்கு மகன்களும் உள்ளனர். மறைந்த அக்கினிராசு அவர்களின் உடல் திருநகர் பகுதியில் உள்ள முத்து ரஜினி அவர்களின் கலைஞர் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி எம்.எல்.ஏ., மதுரை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் தமிழரசி, சட்டத் துறை இணைச் செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் அக்கினிராசு அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

banner

Related Stories

Related Stories