தமிழ்நாடு

“சொந்த கட்சி பெண்களுக்கே பாலியல் தொல்லை”: பா.ஜ.க மாவட்ட தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார் !

விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் மீது பா.ஜ.கவை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சொந்த கட்சி பெண்களுக்கே பாலியல் தொல்லை”: பா.ஜ.க  மாவட்ட தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் அதிகம் ஈடுபடுவதே பா.ஜ.கவினர் எனவும் கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் கூட, உத்திர பிரதேசம் உனா பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு, டெல்லியில் முன்னால் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது மருமகளே புகார் கொடுத்துள்ள சம்பவம் என பா.ஜ.க-வினர் மீதே பல பாலியல் புகார்கள் குவிந்து கிடக்கின்றது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில், விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் மீது பா.ஜ.கவை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சொந்த கட்சி பெண்களுக்கே பாலியல் தொல்லை”: பா.ஜ.க  மாவட்ட தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார் !

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் கண்ணடாச்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்தவர் காயத்திரி. இவர் பா.ஜ.கவின் மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளராக உள்ளார். இவர், தன்னை மாவட்ட மகளிர் அணி தலைவர் பதவி வழங்குவதாக கூறி கலிவரதன் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக பா.ஜ.க மாநில தலைவருக்கு எழுதிய கடிதம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் காயத்திரி எழுதியதாக வெளியான அந்த கடித்ததில், “நான் விழுப்புரம் மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளராக உள்ளேன். மாவட்டத் தலைவர் வி.ஏ.டி. கலிவரதன், மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கும்போதே ”என்னை கட்சியில் மாவட்ட மகளிரணி தலைவி பொறுப்பு வாங்கித் தருகிறேன்” என்று நயவஞ்சகமாக பேசி என்னிடம் சுமார் 15 லட்சம் வாங்கி ஏமாற்றி உள்ளார்.

என்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். என்னை கட்சிப்பணி செய்யவிடாமல் தடுக்கிறார். அதுமட்டுமல்லாது என்னை பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் “உன்னை தீர்த்துக்கட்டிவிடுவேன்” என்று கொலை மிரட்டலும் விடுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளது.

“சொந்த கட்சி பெண்களுக்கே பாலியல் தொல்லை”: பா.ஜ.க  மாவட்ட தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார் !

மேலும் அந்த கடிதத்தில், பா.ஜ.க மாநில தலைமை பாலியல் புகார் குறித்து குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என எழுதியுள்ளார். இந்த விவகாரம் அம்மாவட்ட பா.ஜ.க பெண் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இதுகுறித்து தற்போது வரை பா.ஜ.க தலைமை மறுப்பு செய்தியோ, விளக்கமோ அளிக்காமல் இருப்பது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories