தமிழ்நாடு

“தமிழக அரசு சூரப்பாவை சஸ்பென்ட் செய்யாதது ஏன்?”: அண்ணா பல்கலை. முற்றுகையிட்டு ‘SFI’ மாணவர்கள் போராட்டம் !

சூரப்பாவை விசாரிக்க ஆணையம் அமைத்த தமிழக அரசால், ஏன் அவரை இடைநீக்கம் செய்ய ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்க முடியவில்லை என இந்திய மாணவர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“தமிழக அரசு சூரப்பாவை சஸ்பென்ட் செய்யாதது ஏன்?”: அண்ணா பல்கலை. முற்றுகையிட்டு ‘SFI’ மாணவர்கள் போராட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து அவர் மீது விசாரணை நடத்த விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள ஒரு நபர் துணைவேந்தர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவ்வாறு நீடித்தால் ஆவணங்களை மறைப்பதற்கான வாய்ப்புள்ளது.

எனவே அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சூரப்பாவை உடனடியாக தமிழக அரசு டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.

தமிழக அரசு மாணவர்கள் நலனை பாதுகாக்க வேண்டும் கல்வித்துறையை பாதுகாக்க வேண்டும் இதற்காக சூரப்பாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும், சூரப்பாவை விசாரிக்க ஆணையம் அமைத்த தமிழக அரசால், அவரை இடைநீக்கம் செய்ய ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்க முடியவில்லை ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories