தமிழ்நாடு

பேய் விரட்டுவதாகச் சொல்லி 2 சிறுமிகளுக்கு வன்கொடுமை... நாமக்கல்லில் போக்சோ சட்டத்தில் பூசாரி கைது!

ராசிபுரம் அருகே 13 மற்றும்15 வயது கொண்ட சகோதரிகளை ஒரு வாரமாக பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேய் விரட்டுவதாகச் சொல்லி 2 சிறுமிகளுக்கு வன்கொடுமை... நாமக்கல்லில் போக்சோ சட்டத்தில் பூசாரி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பறவைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி கோவிந்தம்மாள். இந்த தம்பதிக்கு 3 மகள்கள் 1 மகன் உள்ளனர். 13 மற்றும் 15 வயதில் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக 2 சிறுமிகளும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் 2 சிறுமிகளையும் மங்களபுரம் பகுதியிலுள்ள பூசாரி சேகர் என்பரிடம் பேய் விரட்டுவதற்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது 2 சிறுமிகளையும் வீட்டிற்குள் அழைத்துச்சென்று மாறி மாறி 1 வாரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் இதுபற்றி பெற்றோர்களிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அஞ்சிய 2 சிறுமிகளும் பயத்துடனே நடந்தது பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் மங்களபுரம் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்கள். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சேகர் என்பவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories