தமிழ்நாடு

அரியலூர் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது!

பொதுமக்கள் மாடிக்குச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே முன்னூரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான கூலித் தொழிலாளி பிச்சை பிள்ளை. இவர் தனது வீட்டுக்கு அருகே வசிக்கும் 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த 12 வயது சிறுமி சத்தம் போடவே, அங்குள்ள பொதுமக்கள் மாடிக்குச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தது தெரியவந்தது.

இதனையடுத்து 43 வயது கூலித்தொழிலாளி பிச்சை பிள்ளையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபருக்கு திருமணமாகி 3 பெண் மற்றும் 1 ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories