தமிழ்நாடு

போதையில் அரசு பேருந்தை கடத்திய நபர்.. 2 கி.மீ துரத்திச் சென்ற ஓட்டுநர்.. திருச்சியில் பரபரப்பு!

ஓட்டுநரும் நடத்துநரும் டீ குடித்துக் கொண்டிருந்த நேரத்தில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்த அரசு பேருந்து கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் அரசு பேருந்தை கடத்திய நபர்.. 2 கி.மீ துரத்திச் சென்ற ஓட்டுநர்.. திருச்சியில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தீபாவளியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கப்பட்ட கோவை கோட்ட ஈரோடு மாவட்டம் கொடுமுடி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து, இன்று மதியம் கரூரிலிருந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

அங்கு பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் சரவணகுமார், நடத்துநர் ரவி அருகில் இருந்த தேநீர் கடையில் தேநீர் குடித்துள்ளனர். அப்போது அந்த பேருந்துக்குள் ஏறிய மர்ம நபர் அரசு சிறப்பு பேருந்தை இயக்கத்தொடங்கினார்.

போதையில் அரசு பேருந்தை கடத்திய நபர்.. 2 கி.மீ துரத்திச் சென்ற ஓட்டுநர்.. திருச்சியில் பரபரப்பு!

அரசு சிறப்பு பேருந்து கண்ணேதிரே கடத்தப்படுவதை கண்டு, ஓட்டுநரும் நடத்துநரும் கத்தியபடியே துரத்திச் சென்றிருக்கிறார்கள். கடத்தப்பட்ட பேருந்து அடுத்த இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் இருந்த சிக்னலில் நின்றது.

பேருந்தையும், பேருந்தை கடந்தியவரையும், போக்குவரத்து போலிஸாரின் உதவியுடன் பிடித்தனர். இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா போதையில் இருக்கும் அந்த நபர், தன்னுடைய பெயரை அஜித் என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories