தமிழ்நாடு

பண்டிகை காலங்களில் தமிழகத்தில் வெகுவாக அதிகரிக்கும் கொரோனா பரவல்? : கொரோனா பாதிப்பு நிலவரம் ! #COVID19

தீபாவளி பண்டிகை நெருக்குவதால், கொரொனா பரவல் அதிகரிக்க வாய்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளது.

பண்டிகை காலங்களில் தமிழகத்தில் வெகுவாக அதிகரிக்கும் கொரோனா பரவல்? : கொரோனா பாதிப்பு நிலவரம் ! #COVID19
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி தமிழகத்தில் இன்று 2,184 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,50,409 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 11,415 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206588 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 77,309 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 1,07,86,565 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று கொரோனா குணமடைந்து 2,237 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 18 ஆயிரத்து 129 ஆக உள்ளது. தற்போது 18,655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பண்டிகை காலங்களில் தமிழகத்தில் வெகுவாக அதிகரிக்கும் கொரோனா பரவல்? : கொரோனா பாதிப்பு நிலவரம் ! #COVID19

இந்த நிலையில், குளிர்காலத்தில் நுரையீரல் சம்பந்தப்பட்ட சுவாச நோய்க்கிருமிகளின் தாக்கம் பொதுவாக அதிகமாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மாஸ்க் அணியாமல் எந்தக் கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது என ஐ.சி.எம்.ஆர் எச்சரித்தது.

ஆனாலும் தீபாவளி பண்டிக்கைநெருங்கும் இந்த வேளையில், பொதுமக்கள் அரசு உத்தரவுகளை மதிக்காமல், சமூக இடைவெளிய கடைபிடிக்காமல் செயல்படுவது மேலும் கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகுக்கும். எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளது. என ம்ருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories