தமிழ்நாடு

சாதி ரீதியாக தொடர் அவமதிப்பு : கால்பிரிவு ஊராட்சியில் தலித் பெண் தலைவர் ராஜினாமா செய்ய முடிவு ! - வீடியோ

தன்னை சாதி ரீதியாக மிரட்டி பணி செய்யவிடாமல் தடுப்பதால், தான் வகிந்த வந்த பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கால்பிரவு ஊராட்சியில், தலித் பெண் தலைவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதி ரீதியாக தொடர் அவமதிப்பு : கால்பிரிவு ஊராட்சியில் தலித் பெண் தலைவர் ராஜினாமா செய்ய முடிவு ! - வீடியோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி பாண்டி. இவர் போட்டியின்றி தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர். அதேப்போல், கால்பிரிவு ஊராட்சியில் துணை தலைவராக அ.தி.மு.க சேர்ந்த நாகராஜன் உள்ளார்.

6 உறுப்பினர்களை கொண்ட இந்த ஊராட்சியில் தலைவர் ராஜேஸ்வரிக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை , தலித் என்பதால் கடந்த 11 மாத காலமாக ஊராட்சி மன்ற தலைவரை புறக்கணித்தே வருகின்றனர் என ராஜேஸ்வரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை சாதி ரீதியாக மிரட்டி பணி செய்யவிடாமல் தடுப்பதால், தான் வகிந்த வந்த பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ராஜேஸ்வரி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதி ரீதியாக தொடர் அவமதிப்பு : கால்பிரிவு ஊராட்சியில் தலித் பெண் தலைவர் ராஜினாமா செய்ய முடிவு ! - வீடியோ

இதுதொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி கூறுகையில், “தாழ்த்தப்பட்டோர் என்பதால், அ.தி.மு.கவைச் சேர்ந்த துணைத் தலைவர் நாகராஜன் மற்றும் மற்ற உறுப்பினர்கள் தனக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார்கள்.

ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்று ஒரு வருட காலமாகியும் எந்தவொரு பணியையும் செய்ய அனுமதிப்பதில்லை. சாதி ரீதியாக மிரட்டுவது மற்றும் மற்ற உறுப்பினர்களை பேசவிடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.

அதுமட்டுமல்லாது, காசோலை புத்தகம் துணை தலைவர் வசமே உள்ளது. சாதி ரீதியில் இழிவுப் படுத்துகிறார்கள். இதுகுறித்து மானாமதுரை ஊராட்சி மன்ற ஆணையாளரிடம் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகின்றனர்.

இதனால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டும் மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை. எனவே கால்பிரவு ஓன்றிய ஊராட்சி மன்ற தலைவர் என தான் வகித்து வந்த தனது பதிவியை ராஜினாமா செய்யப்போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அ.தி.மு.கவைச் சேர்ந்த துணைத் தலைவரான நாகராஜ் தரும் நெருக்கடிகள், தொடர்ந்து சாதி ரீதியாக அவமானப்படுத்தப்படுவதால் வேறு வழியின்றி பதவியை ராஜினாமா செய்ய போவதற்போது ராஜேஸ்வரி தெரிவித்த நிலையில், கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் அதிகாரிகள் கால்பிரவு வர உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ஊராட்சியில், சாதி ஆதிக்கத்தினர் பட்டியலினத்தைச் சேர்ந்த உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அவமதிப்பதும், மிரட்டுவதும் தொடர்கதையாகி வருகின்றன. அ.தி.மு.க அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories