தமிழ்நாடு

“தலித் ஊராட்சித் தலைவருக்கு தொடரும் அவமரியாதை..” : மதுரை ஊராட்சித் தலைவிக்கு உறுப்பினரால் நேர்ந்த கொடுமை!

மதுரை மாவட்டம் மேலக்கால் ஊராட்சியில், தன்னைத் பணி செய்ய விடாமல் தடுப்பதாக தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சித் தலைவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தலித் ஊராட்சித் தலைவருக்கு தொடரும் அவமரியாதை..” : மதுரை ஊராட்சித் தலைவிக்கு உறுப்பினரால் நேர்ந்த கொடுமை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் உள்ள ஊராட்சியில், சாதி ஆதிக்கத்தினர் பட்டியலினத்தைச் சேர்ந்த உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அவமதிப்பதும், மிரட்டுவதும் தொடர்கதையாகி வருகின்றன.

குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் அம்மாள் சுதந்திரத்தன்று தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்த விவகாரம் பரபரப்பைக் கிளப்பியது.

அப்போது, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தார். மேலும், ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் அம்மாள் தேசியக்கொடியை ஏற்ற வைத்தார். அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம், ஊராட்சி மன்றத் தலைவரான சரிதாவை, அலுவலகத்தில் அமரவிடாமல் கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“தலித் ஊராட்சித் தலைவருக்கு தொடரும் அவமரியாதை..” : மதுரை ஊராட்சித் தலைவிக்கு உறுப்பினரால் நேர்ந்த கொடுமை!

அதுமட்டுமின்றி, கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களை அவர்களுக்கான இருக்கைகளில் அமரவிடாமல், சாதி ஆதிக்கச்சக்தியினர் தரையில் அமரவைத்துள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சாதி வன்மத்தை வெளிப்படுத்தியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்து ஒரு சம்பவம், மதுரை மாவட்டம் மேலக்கால் ஊராட்சியில், தன்னைப் பணி செய்ய விடாமல் தடுப்பதாக தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சித் தலைவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலக்கால் ஊராட்சித் தலைவராக தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண் பொறுப்பு வகித்து வருகிறார். இவரை ஊராட்சி மன்ற பணிகளை செய்ய விடாமல், இவரை வார்டு உறுப்பினர்கள் பழக்கடை பாண்டி, வட்டி காசி, இ.பி. பாண்டி, ராதா, கதிரவன் ஆகியோர் தடுத்துவருவதாக முருகேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்.

“தலித் ஊராட்சித் தலைவருக்கு தொடரும் அவமரியாதை..” : மதுரை ஊராட்சித் தலைவிக்கு உறுப்பினரால் நேர்ந்த கொடுமை!

இதுதொடர்பாக ஊராட்சித் தலைவி முருகேஸ்வரி கூறுகையில், “ஊராட்சி மன்றம் சார்பில், கொண்டு வரப்படும் பணிகளின் தீர்மானங்களில் கையெழுத்துப் போட எனக்கு அனுமதியில்லை. ஆயுதபூஜைக்கு சாமி கும்பிட அனுமதிக்கவில்லை, ஊராட்சி செயலர் ஒய்யனன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சார்லஸ் ஆகியோர் உறுப்பினர்களுக்கு ஆதரவாகவும், எனக்கு எதிராகவும் செயல்படுகின்றனர்.

சாதியைக் குறிப்பிட்டு அவதூறாகப் பேசுகின்றனர். எனவே ஐந்து ஊராட்சி உறுப்பினர்கள மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இது தொடர்பாக ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் முருகேஸ்வரி வியாழனன்று புகாரளித்ததோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டமும் நடத்தினார்.

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தலித் ஊராட்சித் தலைவர்கள் அவ்வப்போது முன்வைத்து வருகின்றனர். எனவே, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்க மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories