தமிழ்நாடு

மீண்டும் சாதி ஆதிக்க கொடுமை : செயலாளர் பதவிக்கேட்டு, தலித் ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டும் அ.தி.மு.க-வினர்!

மதுரை, நாட்டார்மங்கலம் ஊராட்சியில், மனைவிக்கு ஊராட்சி செயலாளர் பதவிக்கேட்டு, அ.தி.மு.க பிரமுகர் மிரட்டல் விடுப்பதாக தலித் ஊராட்சி தலைவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் சாதி ஆதிக்க கொடுமை : செயலாளர் பதவிக்கேட்டு, தலித் ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டும் அ.தி.மு.க-வினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் உள்ள ஊராட்சியில், சாதி ஆதிக்கத்தினர் பட்டியலினத்தைச் சேர்ந்த உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளை அவமதிப்பதும், மிரட்டுவதும் தொடர்கதையாகி வருகின்றன.

குறிப்பாக சமீபத்தில், கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களை அவர்களுக்கான இருக்கைகளில் அமரவிடாமல், சாதி ஆதிக்கச்சக்தியினர் தரையில் அமரவைத்துள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சாதி வன்மத்தை வெளிப்படுத்தியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்து ஒரு சம்பவம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாட்டார்மங்கலம் ஊராட்சியில் நடந்துள்ளது.

மீண்டும் சாதி ஆதிக்க கொடுமை : செயலாளர் பதவிக்கேட்டு, தலித் ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டும் அ.தி.மு.க-வினர்!

அங்கு, மனைவிக்கு ஊராட்சி செயலாளர் பதவிக்கேட்டு, அ.தி.மு.க பிரமுகர் மிரட்டல் விடுப்பதாக தலித் ஊராட்சி தலைவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டார்மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன். இவர் நேற்றைய தினம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தன்னை யாரும் கடத்தவில்லை.

உசிலம்பட்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வின் ஆதரவாளரான சிவபிரகாஷ் என்பவர் தவறாக புகார் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாது, அ.தி.மு.க நிர்வாகியான சிவபிரகாஷ், தனது மனைவியை ஊராட்சி செயலாளர் பதவி வழங்க வேண்டும் என தன்னை தொடர்ந்து மிரட்டல் விடுத்தார்.

மீண்டும் சாதி ஆதிக்க கொடுமை : செயலாளர் பதவிக்கேட்டு, தலித் ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டும் அ.தி.மு.க-வினர்!

அந்த காரணத்தால், பாதுகாப்பு கருதி மதுரை அனுப்பானடியில் உள்ள தனது மகள் வீட்டில் இருந்தேன் என்றும் கணேசன் தெரிவித்தார். ஊராட்சி செயலாளர் நேர்முக தேர்வு 22ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க நிர்வாகி ஊராட்சி மன்ற தலைவரை தொடர்ந்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நாட்டார்மங்கலம் ஊராட்சி கீரிப்பட்டி, பாப்பாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட முடியாத சூழ்நிலை இருந்த நேரத்தில், தி.மு.க ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories