தமிழ்நாடு

தேனியில் சாதி ஆதிக்க கொடுமை: தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவரை செயல்பட விடாமல் அச்சுறுத்தும் பாஜக து.தலைவர்!

தேனி மாவட்டம் கீழவடகரை ஊராட்சிமன்ற தலைவர் தலித் என்பதால், சுதந்திரமாக செயல்படவிடாமல், பா.ஜ.க மாநில துணைத் தலைவர் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேனியில் சாதி ஆதிக்க கொடுமை: தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவரை செயல்பட விடாமல் அச்சுறுத்தும் பாஜக து.தலைவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் உள்ள ஊராட்சியில், சாதி ஆதிக்கத்தினர் பட்டியலினத்தைச் சேர்ந்த உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அவமதிப்பதும், மிரட்டுவதும் தொடர்கதையாகி வருகின்றன. குறிப்பாக சமீபத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் அம்மாள் சுதந்திரத்தன்று தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்த விவகாரம் பரபரப்பைக் கிளப்பியது.

அப்போது, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தார். மேலும், ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் அம்மாள் தேசியக்கொடியை ஏற்ற வைத்தார். அதனைத் தொடர்ந்தே, கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம், ஊராட்சி மன்றத் தலைவரான சரிதாவை, அலுவலகத்தில் அமரவிடாமல் கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களை அவர்களுக்கான இருக்கைகளில் அமரவிடாமல், சாதி ஆதிக்கச்சக்தியினர் தரையில் அமரவைத்துள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது.

தேனியில் சாதி ஆதிக்க கொடுமை: தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவரை செயல்பட விடாமல் அச்சுறுத்தும் பாஜக து.தலைவர்!

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சாதி வன்மத்தை வெளிப்படுத்தியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்து ஒரு சம்பவம் தேனி மாவட்ட பெரியகுளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றில், தலித் பெண் ஊராட்சி தலைவிக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், பா.ஜ.க மாநில துணைத்தலைவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் கீழவடகரை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக செல்வராணி என்பவர் உள்ளார். அங்கு தேனி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் ராஜபாண்டியன் உள்ளார்.

இந்நிலையில், ராஜபாண்டியன் ஊராட்சி மன்றத்தின் தலைவர் செல்வராணியிடம், “எந்த பணியையும் என்னை கேட்காமல் செய்யக்கூடாது. சாலை போடும் பணிகள் உள்ளிட்ட அரசு பணிகளை நான் கூறும் நபர்களுக்கே டெண்டர் அளிக்க வேண்டும்.

தேனியில் சாதி ஆதிக்க கொடுமை: தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவரை செயல்பட விடாமல் அச்சுறுத்தும் பாஜக து.தலைவர்!

மேலும், ஆடு லோன் வழங்குதற்கு மத்திய அரசிலிருந்து வருவதால் தான் சொல்லும் நபர்களுக்கே அவற்றை வழங்க வேண்டும்” என்று மிரட்டுவதாக ஊராட்சிமன்ற தலைவி செல்வராணி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து பெரியகுளத்தில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பு அவசர கூட்டத்தில், பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவி செல்வராணி முறையிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தேனியில் சாதி ஆதிக்க கொடுமை: தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவரை செயல்பட விடாமல் அச்சுறுத்தும் பாஜக து.தலைவர்!

நாளை தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, செல்வராணியின் கணவர் செல்வராஜ் கூறுகையில், “என் மனைவி தலைவராக உள்ள ஊராட்சியில்தான் ராஜபாண்டியன் அதிகம் தலையீடு செய்கிறார். நாங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததால் இப்படி கொடுமைப்படுத்துகிறாரா என தெரியவில்லை.

சாலை அமைப்பதில், தான் சொல்லும் நபருக்கு டெண்டர் தரவேண்டும் என்கிறார். ஆடு லோன் வழங்குவதிலும் தலையீடு செய்கிறார். ஆடு லோன் நாங்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது, ஜீப்பில் நான்கு பேருடன் வந்து, தான் சொல்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories