தமிழ்நாடு

அடுத்த 2 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னையில் இதே நிலை நீடிக்கும்!

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகப் பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, அடுத்த 48 (நவம்பர் 7,8) மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 72 (நவம்பர் 9) மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் செய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

அடுத்த 2 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னையில்  இதே நிலை நீடிக்கும்!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இடையப்பட்டி (மதுரை ) 7 செ.மீ, காரியாபட்டி (விருதுநகர் ) 6 செ.மீ, விரகனுர் அணை (மதுரை ), மானாமதுரை (சிவகங்கை ), பேரையூர் (மதுரை ) தலா 5 செ.மீ, திருப்புவனம் (சிவகங்கை ), தல்லாகுளம் (மதுரை ), பிளவக்கல் (விருதுநகர் ), காயல்பட்டினம் (தூத்துக்குடி ), கூடலூர் (தேனி), திருச்செந்தூர் (தூத்துக்குடி ), சோழவந்தான் (மதுரை ) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories