தமிழ்நாடு

பெண்ணிடம் இழிவாக நடந்து கொண்ட RSS நிர்வாகி எய்ம்ஸ் உறுப்பினராக நியமனம் - கொந்தளிக்கும் தமிழக MPக்கள்!

மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பெண்ணிடம் இழிவாக நடந்துக்கொண்ட ஆர்.எஸ்.எஸை சேர்ந்த மருத்துவரை உறுப்பினராக நியமித்துள்ளது மத்திய அரசு.

பெண்ணிடம் இழிவாக  நடந்து கொண்ட RSS நிர்வாகி எய்ம்ஸ் உறுப்பினராக நியமனம் - கொந்தளிக்கும் தமிழக MPக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதாக அறிவித்து அடிக்கல் நாட்டப்பட்டு 21 மாதங்கள் ஆனப்பிறகு எந்த பணிகளும் தொடங்கப்படாத நிலையில் அதற்கான தலைவரையும், உறுப்பினர்களையும் நியமித்து அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

தமிழ்நாடு, அசாம், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015ம் ஆண்டு அறிவித்தது மத்திய அரசு.

அதன் பிறகு 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி தமிழகத்தின் மதுரையில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இன்றளவிலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணிகளும் தொடங்கப்படாமலேயே உள்ளது.

பெண்ணிடம் இழிவாக  நடந்து கொண்ட RSS நிர்வாகி எய்ம்ஸ் உறுப்பினராக நியமனம் - கொந்தளிக்கும் தமிழக MPக்கள்!

இப்படி கட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை நியமித்து மத்திய பாஜக அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக உள்ள வி.எம்.கடோச் என்பவரை மதுரையில் அமைக்கக்கப்படாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும், தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையன், சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர் சுப்பையா சண்முகம் உள்ளிட்ட 14 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அந்த சுப்பையா சண்முகம் என்ற மருத்துவர் அண்மையில் சென்னை நங்கநல்லூரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் பெண் வசிக்கும் பக்கத்து வீட்டின் வாயிலில் சிறுநீர் கழித்து தொல்லை செய்து சர்ச்சையில் சிக்கியர் ஆவர்.

பெண்ணிடம் இழிவாக  நடந்து கொண்ட RSS நிர்வாகி எய்ம்ஸ் உறுப்பினராக நியமனம் - கொந்தளிக்கும் தமிழக MPக்கள்!

சுப்பையா சண்முகத்தின் நியமனத்துக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு பெண் ஒருவரை துன்புறுத்திய புகாரில் சிக்கியவரின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் காங்கிரஸின் எம்.பி மாணிக்கம் தாகூர், மதுரை எம்பி சு.வெங்கடேசன் மற்றும் எம்பி ரவிக்குமார் மத்திய சுகாதாரத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனைக் குழுவில் நியமிக்கப்பட வேண்டிய 3 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களையும் மத்திய அரசு அறிவிக்கமால் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories