தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு கொரோனா தொற்று... மொத்த பாதிப்பு 7,09,005 -ஆக அதிகரிப்பு! #CORONAUPDATE

தமிழகத்தில் இன்று மட்டும் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

தமிழகத்தில் இன்று மட்டும் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,09,005 ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,869பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,09,005 ஆக அதிகரித்துள்ளது.

அதேப்போல், இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 10,924 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு கொரோனா தொற்று... மொத்த பாதிப்பு 7,09,005 -ஆக அதிகரிப்பு! #CORONAUPDATE

கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 4,019 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6,67,475 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 30,606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 95,17,507 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 89,39,331 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 764 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories