தமிழ்நாடு

“விளைய வெச்ச தேயிலையை விக்க முடியலை” : தொழிற்சாலைகளை கண்டித்து பசுந்தேயிலையுடன் விவசாயிகள் போராட்டம்!

குன்னூரில் செய்யப்பட்ட பசுந்தேயிலையை வாங்க மறுத்த தொழிற்சாலைகளை கண்டித்து தென்னிந்திய தேயிலை வாரியம் அலுவலகத்தை பசுந்தேயிலையுடன் விவசாயிகள் முற்றுகையிட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் ஒன்று தேயிலை தொழில் மற்றும் சுற்றுலாவை சார்ந்ததாகும். நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு ஏக்கர் அரை ஏக்கர் என 55 ஆயிரம் சிறு குறு விவசாயிகள் பசுந்தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு பசுந்தேயிலை விலை உச்சத்தை எட்டியுள்ளது. தரம் வாய்ந்த முதல் தரம் பசுந்தேயிலை 36 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், சாதாரண ரகம் 27 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இந்நிலையில் கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, கூக்கல்தொரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் தேயிலை தொழிற்சாலை நிர்வாகங்கள், சிறு குறு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பசுந்தேயிலைக்கு தேயிலை வாரியத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை வழங்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

“விளைய வெச்ச தேயிலையை விக்க முடியலை” : தொழிற்சாலைகளை கண்டித்து பசுந்தேயிலையுடன் விவசாயிகள் போராட்டம்!

இதனால், கடந்த 17 நாட்களாக விவசாயிகளிடமிருந்து பசுந்தேயிலையை கொள்முதல் செய்யாமல், எவ்வித அறிவிப்பும் இன்றி தொழிற்சாலையை மூடி உள்ளனர். இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு பசுந்தேயிலை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றும் தேயிலையை வாங்குவதற்கு பல்வேறு தொழிற்சாலைகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அறுவடை செய்யப்பட்ட பசுந்தேயிலையுடன் தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலகத்ததை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போலிஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இனிவரும் காலங்களில் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலையை வாங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் விவசாயிகள் களைந்து சென்றனர்.

banner

Related Stories

Related Stories