தமிழ்நாடு

முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

அ.ம.மு.க பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெற்றிவேல் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.ம.மு.க பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெற்றிவேலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் கடந்த 6-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், “அ.ம.மு.க. பொருளாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு தி.மு.க சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சென்னை மாநகர மேயராக இருந்தபோது - மாமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி, அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை, தேவைகளை மாமன்றத்தில் எடுத்து வைத்து, அவற்றிற்குத் தீர்வு கண்டவர்.

சட்டமன்ற உறுப்பினராக, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் தொகுதி மக்களின் பிரச்சினைகளைச் சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமாக எடுத்து வைத்துப் பேசக்கூடியவர்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories