தமிழ்நாடு

“பா.ஜ.கவுக்கு சேவகம் செய்யும் அ.தி.மு.கவின் இட ஒதுக்கீட்டு வேஷம் கலைந்தது” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

அடிக்கும் கொள்ளைக்கு சிக்கல் வரக்கூடாது என பாஜகவுக்கு சேவகம் செய்யும் அடிமை அதிமுகவின் இட ஒதுக்கீட்டு வேஷம் கலைந்தது என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில், அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டை மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக மறுத்து வருகின்றது.

அதனைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரி தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று முன் தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை வந்தது.

அப்போது, இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக அரசின் பிரதிநிதி முன் வைக்கவில்லை. அடுத்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவரின் இடஒதுக்கீடு சதவீதங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

“பா.ஜ.கவுக்கு சேவகம் செய்யும் அ.தி.மு.கவின் இட ஒதுக்கீட்டு வேஷம் கலைந்தது” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

ஆனால், மாநில அரசிடம் கேட்ட சில விவரங்களை இன்னும் தமிழக அரசு தராததால் அதில் முடிவு எடுக்க இயலவில்லை” என்றும் மத்திய அரசு கூறியது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இதனிடையே, அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் இந்த ஆண்டே பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு கமிட்டியில் கோரவில்லை என மத்திய அரசு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது; அ.தி.மு.க.வின் கபட நாடகம் வெட்டவெளிச்சமாகியுள்ளது" என திராவிட கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

இந்நிலையில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “'MBBS- BDS -மருத்துவ மேற்படிப்பில் BC-MBC மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தவில்லை.'அடிமைகளின் துரோகத்தை உச்ச நீதிமன்றத்தில் இப்படி அம்பலப்படுத்தியுள்ளார் மத்திய அரசின் Solicitor General துஷார் மேத்தா

அடிக்கும் கொள்ளைக்கு சிக்கல் வரக்கூடாது என பாஜகவுக்கு சேவகம் செய்யும் அடிமை அதிமுகவின் இட ஒதுக்கீட்டு வேஷம் கலைந்தது. மருத்துவ இட ஒதுக்கீடு, அண்ணா பல்கலைக்கழக இட ஒதுக்கீடு என எல்லாவற்றையும் சிக்கலில் தள்ளி சமூகநீதிக்கு சவக்குழி பறிக்கும் அதிமுக-பாஜக துரோகத்தை தமிழகம் மன்னிக்காது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories