தமிழ்நாடு

புகாரளிக்க வந்தவர்கள் மீதே குண்டர்களை ஏவி தாக்குதல் - கஞ்சா விற்பனைக்கு துணைபோகும் காவல்துறை டி.எஸ்.பி!?

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனைக்கு துணைபோவதாக டி.எஸ்.பி மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புகாரளிக்க வந்தவர்கள் மீதே குண்டர்களை ஏவி தாக்குதல் - கஞ்சா விற்பனைக்கு துணைபோகும் காவல்துறை டி.எஸ்.பி!?
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலமுருகன் மற்றும் செல்லச்சாமி. இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகே ஆறுமுகசாமி என்பவர் பல வருடங்களாக கஞ்சா விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத பலர் அங்கு வந்து கஞ்சா பொருட்களை வாங்கிச் செல்வதோடு சட்டவிரோத செயல்கள் பலவற்றிலும் ஈடுபடுவதாக பாலமுருகன் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, புகார் கொடுத்த பாலமுருகன் மீதே காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் வழக்குப் பதிவு செய்ததோடு மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

கஞ்சா விற்பனை நடைபெறும் ஆறுமுகசாமியின் வீடே சட்டவிரோத காவல்நிலையம் போல அப்பகுதியில் செயல்படுவதாகவும் இதன் காரணமாக தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு வாழ முடியாத சூழல் நிலவுவதால் கோவில்பட்டி டி.எஸ்.பி-யிடம் இவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

ஆனால் டி.எஸ்.பி-யும் கஞ்சா விற்பனையாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதோடு, டி.எஸ்.பி கலை கதிரவன் குண்டர்களை ஏவி தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாலமுருகன் மற்றும் செல்லச்சாமி ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே, சமூகவிரோத கும்பலுக்குத் துணையாகச் செயல்பட்டு பொதுமக்களை அச்சுறுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories