தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர் பெயரிலேயே மோசடியை அரங்கேற்றிய ஆன்லைன் கொள்ளையர்கள் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பெயரில் அரசு அதிகாரிகளுக்கு போலி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் பெயரிலேயே மோசடியை அரங்கேற்றிய ஆன்லைன் கொள்ளையர்கள் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆன்லைன் மூலம் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் பெயரிலேயே அதிகாரிகளுக்கு மோசடி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெயரிலான மின்னஞ்சல் முகவரியிலிருந்து நீலகிரி மாவட்டம் முழுவதுமுள்ள அரசு அதிகாரிகளுக்குக் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மின்னஞ்சலில், “அமேசான் கிஃப்ட் கார்ட் ஆர்டர் பண்ணி, அந்த லிங்க்கை மெயில் ஐ.டி க்கு அனுப்புங்க. பணத்தை அப்புறம் அனுப்புகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், ஆட்சியருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த ஆட்சியர் இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, “பிரபல நிறுவனத்தில் ‘பரிசுக் கூப்பன்களை வாங்குங்கள். அதற்கான பணத்தை பின்னர் கொடுத்து விடுகிறேன்’ எனக் குறிப்பிட்டு என என் பெயரில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் என்னிடம் கூறினர்.

அதிகாரிகளுக்கு எனது அலுவலக மின்னஞ்சல் முகவரியான collrnkg.nic.in மூலமே மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. இந்தப் போலி மின்னஞ்சல் எனது பெயரில் மோசடியாக அனுப்பப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் பெயரிலேயே மோசடியை அரங்கேற்றிய ஆன்லைன் கொள்ளையர்கள் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நான் உடனடியாக இதுகுறித்துக் காவல்துறையில் புகார் அளித்தேன். மேலும், அதிகாரிகளிடம் இத்தகைய மின்னஞ்சலைத் திறக்க வேண்டாம் என அறிவுறுத்தினேன். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசியுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன், “மோசடி நபர்கள் போலியான ஹைப்பர்லிங்க், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர். இதன் மூலம் நமது தகவல்கள் திருடப்படுகின்றன.

ஆட்சியரின் பேரில் உள்ள மின்னஞ்சல் குறித்து சைபர் கிரைம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் இத்தகைய மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகள் வந்தால் அவற்றைப் புறந்தள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories