நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆளும் அதிமுகவினர் போலியான பயனாளர்கள் பெயரில் தொடர்ந்து பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் எவ்வளவு ஆடுகள், எத்தனை பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. என காவல்துறையினர் உரிமை சட்டத்தின் கீழ் வேதாரண்யம் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் கேள்வி ஏழுப்பி இருந்தார்.
அதன் அடிப்படையில் வந்த தகவலில் விலையில்லா ஆடுகள் வழங்கியதில் பல லட்சம் ரூபாய் அதிகாரிகள் துணையோடு அதிமுகவினர் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் புகார் அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் வேதனை தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் ஓரு ஊராட்சியில் மட்டுமே பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்று இருக்கிறது என்றால், தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுபட்டு இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஆகையால் அரசு விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் உண்மையான பயனாளர்கள் பெற்று இருக்கிறார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.