தமிழ்நாடு

WeekEnd பார்ட்டிகளுக்காக சென்னையில் புழங்கும் கஞ்சா விற்பனை.. கையும் களவுமாக 4 கிலோ கஞ்சா பறிமுதல்!

“வீக் எண்ட் இரவு பாா்ட்டிக்காக” பல்லாவரம் ரேடியல் சாலையில் அதிகாலையில் கஞ்சா விற்ற 4 பேரை தனிப்படை போலீஸ் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை புறநகா் பகுதிகளில் வீக் எண்ட் பாா்ட்டிகளுக்காக பெருமளவு கஞ்சா விற்பனை நடப்பதாகவும்,குறிப்பாக பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் இந்த விற்பனை நடப்பதாகவும், அதிலும் ரகசிய குறியீட்டை சொல்லி கேட்பவா்களுக்கு மட்டுமே விற்பனை நடப்பதாகவும் பரங்கிமலை மதுவிலக்கு பிரிவு தனிப்படை போலிஸுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலிஸார் இன்று அதிகாலை மாறு வேடத்தில் பைக்குகளில் இச்சாலையில் வந்து கண்காணித்தனா். அப்போது ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை சந்திப்பில் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திகொண்டு 2 இளைஞா்கள் நின்றனா். சந்தேகத்தின் பேரில் அவா்களிடம் போலிஸார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். அதோடு அவசரமாக அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனா்.

அவா்களை மடக்கிப்பிடித்து வண்டியை சோதணையிட்டபோது, மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். சென்னை பெரும்பாக்கத்தை சோ்ந்த ரஞ்சித் (34), வேளச்சேரியை சோ்ந்த சங்கரநாராயணன் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனா்.

WeekEnd பார்ட்டிகளுக்காக சென்னையில் புழங்கும் கஞ்சா விற்பனை.. கையும் களவுமாக 4 கிலோ கஞ்சா பறிமுதல்!

பின்பு அவா்கள் கொடுத்த தகவலின் பேரில் சற்று தூரத்தில் புதா்களிடையே மறைந்திருந்த ஆதம்பாக்கத்தை சோ்ந்த ரூபன்ராஜ் (19), அயனாவரத்தை சோ்ந்த சரண் (24) ஆகிய 2 பேரை கைது செய்து அவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பாா்சலை கைப்பற்றினா்.

இதையடுத்து தனிப்படை போலீசாா் 4 பேரையும், கைப்பற்றப்பட்ட 4 கிலோ கஞ்சாவையும் ஆதம்பாக்கம் போலிஸில் ஒப்படைத்தனா். இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ல நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories