தமிழ்நாடு

பா.ஜ.க-வை பின்பற்றும் அ.தி.மு.க? : கஞ்சா விற்பனை செய்த ஆளுங்கட்சி பிரமுகர் தூத்துக்குடியில் கைது!

தூத்துக்குடியில் அ.தி.மு.க பிரமுகர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க-வை பின்பற்றும் அ.தி.மு.க? : கஞ்சா விற்பனை செய்த ஆளுங்கட்சி பிரமுகர் தூத்துக்குடியில் கைது!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தூத்துக்குடியில் அ.தி.மு.க பிரமுகர் முரளி தாஸ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதால் இளைஞர்கள் பலர் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி வடபாகம் போலிஸார் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த தூத்துக்குடி நடராஜபுரத்தை சேர்ந்த முனியசாமி என்பவரும், சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க வட்டச் செயலாளர் முரளி தாஸ் என்பவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலிஸார் அவர்களிடம் இருந்து 2.2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமீபத்தில், பா.ஜ.க பிரமுகர் அபின் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கூட்டணி கட்சியான அ.தி.மு.கவினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதாகியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories