தமிழ்நாடு

“மண்ணெண்ணெய் விலையை உயர்த்தி மேலும் சுமையை ஏற்றுவது இரக்கமில்லாத செயல்” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது நியாயமில்லாத செயல் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“மண்ணெண்ணெய் விலையை உயர்த்தி மேலும் சுமையை ஏற்றுவது இரக்கமில்லாத செயல்” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நியாயவிலைக் கடைகளில் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல், மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு 1.50 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது நியாயமில்லாத செயல் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (25-9-2020) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

“பெரும்பான்மை ஏழை - எளிய மக்கள் சமையலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையை, நியாய விலைக் கடைகளில் வரும் அக்டோபர் 1 முதல், ஒரு லிட்டருக்கு 1.50 ரூபாய் உயர்த்தி, 15 ரூபாய் என்பதை, 16.50 ரூபாய்க்கு விற்கப் போகிறார்களாம். மண்ணெண்ணெயின் இந்த விலை உயர்வு கண்டனத்திற்குரியது.

கொரோனா நோய்த் தொற்றின் விளைவாக, வாங்கும் சக்தியைப் பெருமளவுக்கு இழந்திருக்கும் எளிய மக்களின் முதுகில், அ.தி.மு.க. அரசு, விலை உயர்வின் மூலம், மேலும் சுமையை ஏற்றுவது, சிறிதும் இரக்கமில்லாத - நியாயமில்லாத செயல்!

இந்த விலை உயர்வை அரசே ஏற்றுக்கொண்டு, பழைய விலையிலேயே நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணெயை வழங்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories