தமிழ்நாடு

சென்னை மெரினாவில் கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திடுக - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

மெரினா கடற்கரையில் கழிவுகள், கழிவு நீர் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென அளவுக்கு அதிகமான நுரை உருவானது. அது காற்றில் பரந்து கடற்கரை முழுதும் பரவியது.

இது குறித்த பி.பி.சி செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதனையடுத்து தேசிய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய குழு கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.

சென்னை மெரினாவில் கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திடுக - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

அதில், நெசப்பாக்கத்தில் உள்ள சென்னை மெட்ரோ நீர், அடையாறு மற்றும் கூவம் ஆகிய ஆறுகளில் கலக்கும் கழிவுநீர் மெரினா அருகே கடலில் கலப்பதால் நுரைகள் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், மெரினா கடற்கறைய ஒட்டிய கடல் பகுதியில் கழிவுநீர் எங்கிருந்து கலக்கிறது என்பதைக் கண்டறிந்து, மாசு ஏற்படுவதைத் தடுக்க தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories