இந்தியா

உயிர்க்கொல்லியாக மாறும் காற்று... சென்னைவாசிகள் தப்பிக்க வழி என்ன? - மருத்துவர்கள் சொல்லும் வழிமுறைகள்!

சென்னையில் காற்று மாசு அதிகரித்திருக்கும் நிலையில், மாசுபாடுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள சில வழிமுறைகளை மருத்துவர்கள் கூறிவருகிறார்கள்.

உயிர்க்கொல்லியாக மாறும் காற்று... சென்னைவாசிகள் தப்பிக்க வழி என்ன? - மருத்துவர்கள் சொல்லும் வழிமுறைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் முதல் வழக்‍கத்தை விட காற்று மாசுபாடு அதிகரித்து அபாய கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, டெல்லி நகரில் காற்றின் தர அட்டவணை 625 என்ற அளவை எட்டியது. அதாவது காற்றின் தரம் 50 என்ற அளவு இருந்தால் சுகாதாரமானது என்றும் அதிகபட்சம் 200 என்ற அளவு மோசமான கட்டம் என கூறப்படுகிறது. ஆனால் டெல்லியில் 625 என்ற அளவை அடைந்து மிகவும் அபாயகரமான அளவை எட்டியுள்ளது.

இந்நிலையில், டெல்லியைப் போல் தமிழகத்தின் தலைநகர் சென்னையும் காற்று மாசுபாட்டால் மிகுந்த பாதிப்புகளைச் சந்திக்கிறது. சென்னையிலும் காற்றின் தர அளவு 261 என்ற புள்ளிகளுக்கு உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் பலஇடங்களில் புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் இதுபோல மாசுபாடுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள சில வழிமுறைகளை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உயிர்க்கொல்லியாக மாறும் காற்று... சென்னைவாசிகள் தப்பிக்க வழி என்ன? - மருத்துவர்கள் சொல்லும் வழிமுறைகள்!

1. ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பு உள்ளவர்கள் எப்போதும் கையில் மருத்துகளை வைத்துக்கொள்ளுங்கள்.

2. காற்று மாசுபாட்டால் ஏற்படும் புகைமூட்டத்தின் போது, தலைவலி, மூச்சுத்திணறல் மற்றும் இருமல் இருந்தால் செய்துகொண்டிருக்கும் வேலையை உடனடியாக கிடப்பில் போட்டுவிட்டு கட்டாயம் ஓய்வு எடுக்கவேண்டும்.

3. அதிகாலை நேரத்திலும், சூரியன் மறையும் நேரங்களில் எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது.

4. பொதுஇடங்களில் செல்லும்போது (N95 Mask) முகமூடி அணிந்துகொண்டு செல்லுங்கள்.

5. வீடு மற்றும் அலுவலங்களில் ஜன்னல் - கதவுகளை அடைத்து வைக்கவேண்டும். தூசு புகுந்துவிடும் அளவிற்கு வழி இருந்தால் அதனையும் அடைக்கவேண்டும்.

6. வீட்டை சுத்தம் செய்யும்போது தூசி எழுந்தால் ஈரமான துணியால் துடைத்துவிட்டு பின்னர் சுத்தம் செய்யவேண்டும்.

7. விறகு மற்றும் மெழுகுவர்த்தி எரிப்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

8. விட்டமின் சி அடங்கியுள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

9. காலை நேரங்களில் நடைபயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை தவிர்த்தல் நல்லது.

காற்று மாசுபாட்டிலிருந்து முற்றிலும் பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம், காற்று தூய்மைப்படுத்தும் சாதனம் உள்ளிட்டவை மட்டும் போதாது; இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் தான் காற்று மாசுபாட்டின் பாதிப்புகளில் இருந்து விடுபடமுடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

banner

Related Stories

Related Stories