தமிழ்நாடு

தி.மு.க உட்பட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு எதிரொலி: ICF பணியிடங்களுக்கு தமிழர்களுக்கு மட்டும் அழைப்பு

சென்னை பெரம்பூரில் உள்ள இந்திய ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க உட்பட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு எதிரொலி: ICF பணியிடங்களுக்கு தமிழர்களுக்கு மட்டும் அழைப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் உள்ள அரசு பணிகளில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருவதால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடுமையான கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

ஆயினும் தமிழக அரசு பணிகள், தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பணிகளில் வட மாநிலத்தவர்கள் அல்லது வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே மத்திய மாநில அரசுகள் பணியமர்த்தி வருகின்றன.

இந்த நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள இந்திய ரயில் பெட்டித் தொழிற்சாலையான ஐ.சி.எஃப்-ல் எலக்ட்ரீசியன், கார்பென்டர், வெல்டர், ஃபிட்டர், மெக்கானிக்கல் போன்ற பணிகளுக்கு தொழில் பழகுநராக (Apprentice)தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க உட்பட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு எதிரொலி: ICF பணியிடங்களுக்கு தமிழர்களுக்கு மட்டும் அழைப்பு

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், மொத்தமாக 990 இடங்களுக்கு ITI படித்தவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 25ம் தேதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு டிப்ளமோ, பொறியியல் மற்றும் இதர பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் எனவும், வேலையுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை வெறும் கண்துடைப்பு நாடகமாக இயற்றிவிடாமல், தொடர்ந்து அரசுப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் எனவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories