தமிழ்நாடு

"பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பின்தங்கியது ஏன்?" - பா.ஜ.க தலைவர்களுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!

"பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் ஏன் தமிழகத்தை விட பின்தங்கியுள்ளது என்பதை பா.ஜ.க தலைவர்கள் விளக்கவேண்டும்.” எனக் கோரியுள்ளார் தி.மு.க எம்.பி கனிமொழி.

"பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பின்தங்கியது ஏன்?" - பா.ஜ.க தலைவர்களுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘Tony Blair Institute for Global Change’ எனும் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரையைச் சுட்டிக்காட்டி, பா.ஜ.க-வினருக்கு கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க எம்.பி கனிமொழி.

கடந்த ஜனவரியில் வெளியான ‘தமிழ்நாட்டில் உள்ளடக்கிய வளர்ச்சி : அரசியல் தலைமை மற்றும் நிர்வாகத்தின் பங்கு’ எனும் தலைப்பிலான அந்த ஆய்வுக்கட்டுரையில் திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆதாரப்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல வட இந்திய மாநிலங்களை விட தமிழகம் அனைத்து துறைகளிலும் மகத்தான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. 50 ஆண்டுகளைக் கடந்த திராவிட ஆட்சியின் விளைவாக அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் முன் நிற்கிறது தமிழகம்.

"பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பின்தங்கியது ஏன்?" - பா.ஜ.க தலைவர்களுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!

1960ஆம் ஆண்டுவாக்கில், தமிழகம் - உத்தர பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களும் வளர்ச்சி தொடர்பான பல நடவடிக்கைகளில் பெரிய வேறுபாடுகள் அற்றவை. 2005ஆம் ஆண்டுவாக்கில், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் உத்தர பிரதேசத்தை விட 128 சதவீதம் அதிகமாக வளர்ந்தது.

இந்தியாவின் 12 மிகப்பெரிய மாநிலங்களில், தமிழ்நாடு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகம் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலமாகவும், வலுவான உற்பத்தித் தளத்தையும், சேவைத் துறையையும் கொண்டுள்ளது.

"பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பின்தங்கியது ஏன்?" - பா.ஜ.க தலைவர்களுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!

இந்தியாவின் 13 மிகப்பெரிய மாநிலங்களில் மனித மேம்பாட்டுக் குறியீட்டில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதாவது, அதிக வளர்ச்சி விகிதங்களையும் பொருளாதார மாற்றத்தையும் குறுகிய காலத்திலேயே தமிழகம் அடைந்துள்ளது.

தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்கள் வெற்றிகரமான மாதிரியாக உருவெடுத்தன. ஒப்பீட்டளவிலான பொருளாதார, அரசியல் வளர்ச்சி என்பது சாத்தியப்பட்டது.

1971 ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சியில் சிப்காட் நிறுவப்பட்டு, பல தொழில்துறை திட்டங்கள் மற்றும் வளாகங்கள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டன.

"பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பின்தங்கியது ஏன்?" - பா.ஜ.க தலைவர்களுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!

குடிசை மாற்று வாரியத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி நகர்ப்புற வறிய பிரிவினருக்கான வீட்டுவசதிகளை செய்து கொடுத்தது திராவிட ஆட்சி.

மானியத்தில் மின்சாரம், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களால் தொழில்துறையும், வேளாண்மையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றது.

மாநில சுயாட்சி தொடர்பான விவாதங்களை பொதுவெளியில் தொடர்ந்து நடத்தியது திராவிட இயக்கங்களே. சமூக நலத் திட்டங்களால் அரசின் நிர்வாகத்தில் பன்மைத்துவத்தை வலுப்படுத்தியது திராவிட ஆட்சி. இந்தியாவிலேயே சமூக நீதியைக் காத்திடும் முதல் குரலாக இன்றளவும் தமிழகம் ஒலிப்பது திராவிட இயக்க அரசுகளின் வழிவந்ததே.

இவ்வாறு விளக்கும் கட்டுரையின் சுட்டியைப் பகிர்ந்துள்ள தி.மு.க எம்.பி கனிமொழி, “திராவிடத்தால் தமிழகம் அடைந்த வளர்ச்சி இதுதான். தமிழகம் ஏறத்தாழ இதர அனைத்து மாநிலங்களைவிடவும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. பா.ஜ.க தலைவர்கள், பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் ஏன் தமிழகத்தை விட பின்தங்கியுள்ளது என்பதை விளக்கவேண்டும்.” எனக் கோரியுள்ளார்.

banner

Related Stories

Related Stories