தமிழ்நாடு

“மோடி இந்தியாவை அழிக்கிறார்; எடப்பாடி தமிழகத்தை அழிக்கிறார்” - தா.பாண்டியன் குற்றச்சாட்டு!

டாலர் கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கும் வரை நம் நாட்டிற்கு முன்னேற்றம் வாராது. எனவே ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும் என தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

“மோடி இந்தியாவை அழிக்கிறார்; எடப்பாடி தமிழகத்தை அழிக்கிறார்” - தா.பாண்டியன் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 74வது சுதந்திர தினத்தையொட்டி, திருச்சி மிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வாயிலில் தேசியக்கொடியினை தா.பாண்டியன் ஏற்றிவைத்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், “போராடிப் பெற்ற நம் சுதந்திரத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் இப்போது இருக்கிறோம். வெளிநாட்டு துரோகிகளை விட உள்நாட்டு துரோகிகள் மோசமானவர்கள்.

டாலரிலிருந்து இந்தியா விடுபடவேண்டும். டாலர் கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கும் வரை நம் நாட்டிற்கு முன்னேற்றம் இல்லை. எனவே ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும்.

“மோடி இந்தியாவை அழிக்கிறார்; எடப்பாடி தமிழகத்தை அழிக்கிறார்” - தா.பாண்டியன் குற்றச்சாட்டு!

உலகத்திலேயே பெட்ரோல் அதிக விலைக்கு விற்கப்படும் நாடு இந்தியா தான். ட்டிரம்ப் உலகத்தை அழிக்கிறார், மோடி இந்தியாவை அழிக்கிறார். எடப்பாடி தமிழகத்தை அழிக்கிறார். எனவே பா.ஜ.கவை எதிர்க்கும் கட்சிக்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும்” என்று அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories