தி.மு.க

அதிமுகவில் உண்மையான தலைமையே இல்லை.. ஊழல் மட்டும்தான் நடக்கிறது.. தி.மு.கவில் இணைந்த டாக்டர் விஜய் பேட்டி!

அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் மருத்துவர் வி.எஸ்.விஜய் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதிமுகவில் உண்மையான தலைமையே இல்லை.. ஊழல் மட்டும்தான் நடக்கிறது.. தி.மு.கவில் இணைந்த டாக்டர் விஜய் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.கவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் வி.எஸ்.விஜய் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது தி.மு.க பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜய் பேசியதன் விவரம்:-

“அ.தி.மு.கவில் தலைமையே சரி இல்லை. ஊழல் ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொரோனா காலத்திலும் 30 சதவிகிதம் கமிஷன் பெற்றுக்கொண்டுதான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான தலைமை இல்லாத காரணத்தால் நான் தி.மு.கவின் இணைந்துள்ளேன்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையை ஏற்று நான் கழகத்தில் இணைந்துள்ளேன். இது எனக்கு பொன்னான நாள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவில் பொறுப்பான என தலைவர் யாருமே இல்லை. யாரையும் மதிக்கும் அளவிற்கு தலைவர்கள் இல்லை.

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் போல ஒவ்வொரு அமைச்சரும் மாவட்டத்தில் தனி சுதந்திரமாக சுயேட்சையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில் கல்வி, சுகாதாரம் போன்ற மாநில சுயமரியாதையை தமிழகத்தில் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க தலைவர் நீட் பிரச்சனை, மாணவர் சேர்க்கை, புதிய கல்விக் கொள்கை, இட ஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளில் குரல் கொடுத்து மாணவ சமுதாயத்திற்கு பாதுகாப்பு அரணாக திகழ்கிறார். ஆனால் அ.தி.மு.க ஆட்சி இந்த பிரச்சினைகளில் தலையிடாமல் கண்டுகொள்ளாமல் உரிமையை பறிகொடுத்துக் கொண்டிருக்கிறது.

கொரோனா ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை தி.மு.க தலைவர் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். அடுத்த கட்ட நகர்வு போன்றவற்றை அக்கறை எடுத்துக் கொண்டு அறிக்கை அளிக்கிறார். தமிழ் இனத்தை காக்கும் ஒரே தலைவராக தி.மு.க தலைவர் திகழ்கிறார்.” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories