தமிழ்நாடு

“ஊரடங்கை பயன்படுத்தி குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம்” : காற்றில் பறந்த முதல்வரின் அறிவிப்பு!

சீர்காழி அருகே கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி குழாய் பதிக்கும் பணிகளில் மீண்டும் கெயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதனால் முதல்வரின் அறிவிப்பு காற்றில் பறந்தது என விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

சீர்காழி அருகே கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி குழாய் பதிக்கும் பணிகளில் மீண்டும் கெயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதனால் முதல்வரின் அறிவிப்பு காற்றில் பறந்தது என விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகே மாதானம் திட்டம்' என்ற பெயரில் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது.

இங்கு எடுக்கப்படும் திரவக நிலையிலான எரிவாயுவை வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல, சீர்காழியை அடுத்துள்ள வேட்டங்குடி,எடமணல், திருநகரி மற்றும் மேமாத்தூர் வரையான சுமார் 32 கிலோமீட்டர் தொலைவுக்கு விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைப்பதற்கான பணிகளை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கெயில் நிறுவனம் தொடங்கியது.

“ஊரடங்கை பயன்படுத்தி குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம்” : காற்றில் பறந்த முதல்வரின் அறிவிப்பு!

இதற்காக 1.5 மீட்டர் ஆழத்திற்கு பூமிக்குள் குழாய்கள் புதைக்கப்பட்டன. இத்திட்டத்திற்கு தி.மு.க மற்றும் தோழமை கட்சிகள், விவசாயிகள், மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்களும் தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியதால், பொதுமக்களின் கருத்து கேட்ட பிறகு குழாய் பதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து இப்பகுதிகளில் விவசாய பணிகளை பாதிக்கும் திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது என அறிவித்திருந்தார். இந்நிலையில் விவசாயிகளின் தொடர் போராட்டங்களினால் நிறுத்தி வைக்கப்பட்ட கெயில் குழாய் புதைக்கும் பணி கொரோனா ஊரடங்கு காலத்திலும் அவசரகதியில் புதிய வழித்தடமாக சீர்காழி அருகேயுள்ள திருநகரியிலிருந்து வழுதலைக்குடி, வெள்ளக்குளம், கேவரோடை வழியாக பழையபாளையம் முதன்மை எரிவாயு சேகரிப்பு மையத்திற்கு குழாய் புதைக்கும் பணி அவசரகதியில் இரவோடு இரவாக நடந்து வருகிறது கெயில் நிறுவனம்.

“ஊரடங்கை பயன்படுத்தி குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம்” : காற்றில் பறந்த முதல்வரின் அறிவிப்பு!

எரிவாயு குழாய் புதைக்கும் பணியால் விவசாயிகளின் விளைநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நிர்க்கதியாக நிற்கும் சூழ்நிலை ஏற்படும். மேலும் பொதுமக்களின் கருத்துகள் கேட்காமல் இத்திட்டங்களை செயல்படுத்த கூடாது என பல்வேறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது போன்ற பெரும் திட்டங்களை செயலாக்கும் போது அந்தந்தப் பகுதி மக்களின் கருத்துக்களை கேட்பது அவசியம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை மத்திய, மாநில அரசுகள் கவனிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் அறிவித்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருந்த பகுதிகளில் மீண்டும் நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழிப்பது ஏற்புடையதல்ல. சில ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படக்கூடிய கெயில், சாகர்மாலா போன்ற திட்டங்களுக்கு அனுமதியளிப்பதும் பல தலைமுறைகளுக்கு பயனளிக்கும் விவசாயத்தை அழிப்பது என்பதும் 'கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு சமமாகும்.

“ஊரடங்கை பயன்படுத்தி குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம்” : காற்றில் பறந்த முதல்வரின் அறிவிப்பு!

நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் பெரும் முதலாளிகளுக்காக பாடுபட்டுவரும் மத்திய அரசு தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே, வறட்சி, மழை, வெள்ளம், கடன்சுமை போன்ற பிச்சினைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் நிலையில் பேரிடர் திட்டங்களினால் விவசாய வாழ்வாதாரம் பாழாகிவிடும்.

குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே, கெயில் குழாய் புதைப்பு பணிகளை உடனடியாக நிறுத்திட வேண்டும் எனவும்,டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக தமிழக முதல்வர் அறிவித்தது என்னவாயிற்று என பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர், உடன் மத்திய, மாநில அரசுகள் இதனை முற்றிலும் தடை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories