தமிழ்நாடு

கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சி... கைவிட்ட கந்துவட்டி தடுப்புச் சட்டம் - சென்னையில் பரிதாபம்!

கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் தற்கொலைக்கு முயற்சித்த பெண் சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்துவட்டி கொடுமையால்  பெண் தற்கொலை முயற்சி... கைவிட்ட கந்துவட்டி தடுப்புச் சட்டம் - சென்னையில் பரிதாபம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கந்து வட்டி கும்பலிடம் சிக்கி மீளமுடியாமல் தமிழகத்தில் பல குடும்பங்கள் ஊரை காலி செய்து விட்டு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். இதில் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடன் பட்டுவிட்டால் அதிலிருந்து மீள்வது சாதாரண காரியமல்ல. ஏனெனில் ஒருமுறை கடன் பட்டவர்கள் அதிலிருந்து மீள முடியாத அளவிற்கு சுழலில் சிக்கிக்கொள்கின்றன.

கந்து வட்டி, மீட்டர் வட்டி, மின்னல் வட்டி, ரன் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, தினவட்டி, ராக்கெட் வட்டி என பல்வேறு வகையில் வட்டித் தொழில் தமிழகம் முழுவதும் செய்து வருகின்றது வட்டிக்கு பணம் வாங்கும் பல அப்பாவி மக்கள்தான் பலியாகி வருகின்றனர்.

கந்துவட்டி கொடுமையால்  பெண் தற்கொலை முயற்சி... கைவிட்ட கந்துவட்டி தடுப்புச் சட்டம் - சென்னையில் பரிதாபம்!

தமிழ்நாடு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் (Tamilnadu Prohibition of Charging Exorbitant Interest Act), கடந்த 2003ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது.அதில் கந்து வட்டி, ரன் வட்டி என்ற பெயரில் கடன் பெற்றவர்களிடம் அதிக பணம் வசூலிப்பது நிரூபிக்கப்பட்டால், மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின்படி, அதிக வட்டி வசூல் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக வகையில் கந்துவட்டி தடுப்புச் சட்டம் இருந்தும் இந்த சட்டம் அப்பாவி மக்களை காப்பதாக தெரியவில்லை.

இந்த நிலையில், சென்னை ஏழுகிணறு சேர்ந்த தேவிகா என்பவர் கடந்த 2017ஆம் ஆம் ஆண்டு கந்து வட்டி என்ற பெயரில் 30 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார் இந்த 30,000 ரூபாய்க்கு வாரம் குறிப்பிட்ட அளவு வட்டி செலுத்த வேண்டும் என்று திடீரென நிபந்தனை விதித்தனர். ஆனால் 30 ஆயிரத்துக்கு மேலாக அவர் வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைக்கப்பட்டு சுமார் 13 லட்சம் ரூபாயை அந்த கந்து வட்டிக்காரர்களிடம் கொடுத்துள்ளார்.

இது போதாதென்று மேலும் 4 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டுமென அவரை மிரட்டியுள்ளனர். இல்லையென்றால் வீட்டிற்கே வந்து அவமானப்படுத்தி விடுவோம் எனவும் மிரட்டி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விவகாரம் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

banner

Related Stories

Related Stories