தமிழ்நாடு

நீலகிரிக்கு ரெட் அலெர்ட்.. தேனி, கோவைக்கு ஆரஞ்சு அலெர்ட்.. 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரியில் அதி கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரிக்கு ரெட் அலெர்ட்.. தேனி, கோவைக்கு ஆரஞ்சு அலெர்ட்.. 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்மேற்கு பருவக் காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதி கனமழையும், கோவை தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரிக்கு ரெட் அலெர்ட்.. தேனி, கோவைக்கு ஆரஞ்சு அலெர்ட்.. 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 34 சென்டி மீட்டர் மழையும், பந்தலூரில் 19 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

நீலகிரிக்கு ரெட் அலெர்ட்.. தேனி, கோவைக்கு ஆரஞ்சு அலெர்ட்.. 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

அதேபோல, மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் 24 மணி நேரத்திற்கு மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதியை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத் தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 9ஆம் தேதி இரவு பதினொன்று முப்பது மணி வரை உயிர் கடலலைகள் 3.5 மீட்டர் முதல் 4.4 மீட்டர் வரை எழும்ப கூடும்.

banner

Related Stories

Related Stories