தமிழ்நாடு

சென்னையில் 1,065, பிற மாவட்டங்களில் 4,810 பேருக்கு மேலும் கொரோனா.. ஒரே நாளில் 98 பேர் பலி.. #CoronaUpdate

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 98 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் மேலும் 5,875 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. 58 ஆயிரத்து 505 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தமிழகத்திலேயே இருந்த 5 ஆயிரத்து 811 பேருக்கும், வெளி மாநில, நாடுகளில் இருந்து வந்த 64 பேருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,065 பேருக்கும், செங்கல்பட்டில் 446, காஞ்சியில் 393, விருதுநகரில் 337, திருவள்ளூரில் 317, தேனியில் 309, குமரியில் 200 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 8 மாவட்டங்களில் 100க்கும் அதிகமான தொற்று பாதிப்புகள் இன்று பதிவாகியுள்ளது.

சென்னையில் 1,065, பிற மாவட்டங்களில் 4,810 பேருக்கு மேலும் கொரோனா.. ஒரே நாளில் 98 பேர் பலி.. #CoronaUpdate

ஆகவே இதுவரையில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.57 லட்சத்து 613 ஆக அதிகரித்துள்ளது. வெளி நாடு மற்றும் மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 5 ஆயிரத்து 554 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 5,517 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து தற்போது சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 998 ஆக உள்ளது.

இதுவரையில், 1.96 லட்சத்து 483 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேப்போல கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 98 ஆக உள்ளது.

சென்னையில் 1,065, பிற மாவட்டங்களில் 4,810 பேருக்கு மேலும் கொரோனா.. ஒரே நாளில் 98 பேர் பலி.. #CoronaUpdate

தினந்தோறும் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. அந்த 98 பேரில் 8 பேருக்கு எவ்வித இணை நோயும் இல்லாமல் கொரோனாவால் மட்டுமே உயிரிழந்தவர்களாவர்.

மொத்தமாக தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 2,157, செங்கல்பட்டில் 257, மதுரையில் 253, திருவள்ளூரில் 254, காஞ்சிபுரத்தில் 117, விருதுநகரில் 96 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories