தமிழ்நாடு

தேனியில் உயிரிழந்த கொரோனா நோயாளி.. ஆம்புலன்ஸ் வராததால் தள்ளுவண்டியில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் கூட அனுமதிக்காத சுகாதாரத்துறையினர் அந்த பெண் இறந்த பின்னர் சடலத்தை எடுக்க ஆம்புலன்சையும் அனுப்பவில்லை.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தினந்தோறும் உச்சகட்ட எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 99 பேரு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அதையடுத்து மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது.

ஒரு புறம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மறுபுறம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், அரசோ மாநிலத்தில் கொரோனா தொற்று சமூக அளவிலும் பரவவில்லை, இறப்பு எண்ணிக்கையும் கட்டுக்குள் இருக்கிறது என அதே ரெக்கார்டையே தொடர்ந்து கிழித்து வருகிறது.

இப்படி இருக்கையில், சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் மட்டுமே இருந்து வந்த கொரோனா பாதிப்பு மாநிலத்தில் தென் மாவட்டங்களிலும் தினந்தோறும் எக்கச்சக்கமாக கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும் பதிவாகி வருகின்றன.

மேலும் முறையான சுகாதார வசதியும் இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சையே அளிக்காமல் உயிரிழக்கும் அவலமும் நிகழ்கிறது. அவ்வகையில், தேனி மாவட்டம் கூடலூர் சேர்ந்த பெண் ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அவரது மகன் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு வயிற்றுப்போக்குக்கு மருந்து கொடுத்த மருத்துவர், கொரோனா பரிசோதனை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

பரிசோதனை முடிவில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும் அவரை வீட்டிலேயே இருக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர். இதனால் உரிய சிகிச்சையின்றி அந்த பெண் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) அதிகாலையில் உயிரிழந்திருக்கிறார்.

இது குறித்து அவரது மகன் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தும் சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸையும் அனுப்பி வைக்கவில்லை. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் சடலத்தை எடுக்கும்படி நெருக்கடி கொடுத்ததால் வேறு வழியில்லாமல் அந்த பெண்ணின் உடலை அவரது மகன் தள்ளுவண்டியில் வைத்து ஒரு போர்வையை மட்டுமே போர்த்தி எடுத்துச் சென்றிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கட்ட்

banner

Latest Stories

Related Stories

Related Stories