Corona Virus

“குடிநீர் இன்றி தவிக்கும் கொரோனா நோயாளிகள்” : திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நிகழும் அவலம்!

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாகத் தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் உள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட சரிவரக் கிடைப்பதில்லை என என கொரோனா நோயாளிகளிடம் இருந்து புகார்கள் வந்த வன்னம் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது திண்டுக்கல்லில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு அடிப்படைத் தேவையான தண்ணீர் கூட கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“குடிநீர் இன்றி தவிக்கும் கொரோனா நோயாளிகள்” : திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நிகழும் அவலம்!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில் அவர்களுக்குக் கடந்த இரண்டு நாளாகக் குடிக்கத் தண்ணீர் வழங்கவில்லை என கூறி நோயாளிகள் மருத்துவமனை செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் அரசின் இதுபோன்ற சுகாதார அலசியதால், அங்குப் பல கொரோனா நோயாளிகள் ஓரே இடத்தில் ஒன்று கூடியது மேலும் அதிகளவில் தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும். எனவே தமிழக அரசு சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Latest Stories

Related Stories

Related Stories