தமிழ்நாடு

"சிட்டுக்குருவிகளுக்காக இருட்டில் வாழும் கிராமம்” - பொத்தகுடி மக்களை நெகிழ்ந்து பாராட்டிய மு.க.ஸ்டாலின்!

மின் இணைப்பு பெட்டியில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டியதால், மின் விளக்கை ஆன் செய்யாமல் இருளிலேயே வாழ்ந்து வரும் கிராமத்தினரின் மனிதநேயமிக்க செயலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

"சிட்டுக்குருவிகளுக்காக இருட்டில் வாழும் கிராமம்” - பொத்தகுடி மக்களை நெகிழ்ந்து பாராட்டிய மு.க.ஸ்டாலின்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மின் இணைப்பு பெட்டியில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டியதால், மின் விளக்கை ஆன் செய்யாமல் இருளிலேயே வாழ்ந்து வரும் கிராமத்தினரின் மனிதநேயமிக்க செயலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே அமைந்துள்ளது பொத்தகுடி கிராமம். இந்த கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அமைந்துள்ளன. அனைத்தையும் ஒரே நேரத்தில் எரிய வைப்பதற்கான மெயின் ஸ்விட்ச் பெட்டி கருப்புராஜா என்ற கல்லூரி மாணவர் ஒருவரின் வீட்டின் அருகே உள்ளது.

இந்த ஸ்விட்ச் போர்டில் சிட்டுக்குருவி ஒன்று அட்டைப் பெட்டியில் சிறு சிறு வைக்கோல், புற்களை சேர்த்துக் கூடி கட்டி முட்டையிட்டுள்ளது. ஸ்விட்சை ஆன் செய்தால் சிட்டுக்குருவி பறந்துவிடும் என அஞ்சி ஸ்விட்சை ஆன் செய்யாமல் இருந்துள்ளார் கருப்பு ராஜா.

இதனால் ஊர் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் கிராம இளைஞர்கள் அனைவரையும் வாட்ஸ்-அப் குழு மூலம் இணைத்து அனைவரின் கருத்தையும் கேட்டு, அதன்படி ஒரு மாதத்திற்கும் மேலாக ஸ்விட்ச் ஆன் செய்யாமல் இருளிலேயே வாழ்ந்து வந்துள்ளனர்.

தற்போது சிட்டுக்குருவியின் மூன்று முட்டைகளிலும் இருந்து சிட்டுக்குருவிக் குஞ்சுகள் வெளியே வந்துவிட்டன. ஆனாலும், அவை பறக்கப் பழகும் வரை இருளிலேயே வாழ பொத்தகுடி கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

சிட்டுக்குருவி இனம் அழிந்து வரும் சூழலில், சிட்டுக்குருவிகளுக்காக ஒரு கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களும் செயல்பட்டு வருவதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் செய்தியை அறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொத்தகுடி கிராம மக்களை நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சிட்டுக்குருவிகள் குஞ்சு பொறித்துள்ள மின்கம்பத்தில் விளக்கை ஒளிரச் செய்வதே இடையூறு என இருட்டிலேயே வாழும் ஊர் நெகிழச் செய்கிறது. முன்னெடுத்த கருப்பு ராஜாவுக்கு வாழ்த்துகள். நாம் இழந்துவிடாத மனிதமே மனங்களில் வெளிச்சம் பாய்ச்சுகிறது. பொத்தகுடி மக்களை வணங்குகிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories