தி.மு.க

“இட ஒதுக்கீடு தீர்ப்பு” : முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையடுத்து, முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கக் கோரினார் மு.க.ஸ்டாலின்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (29-07-2020), இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம், மத்திய - மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்திய மருத்துவக் கவுன்சில் என மூன்று தரப்புக் குழு அமைத்து, கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் மூன்று மாதங்களில் முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையடுத்து, அதற்கு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கக் கோரி,

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் து.ராஜா,

மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவ கவுடா,

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், (லாலு பிரசாத் யாதவ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மனோஜ் ஜா தொலைபேசி வாயிலாகப் பேசினார்.)

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி,

தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கே.சந்திரசேகர் ராவ்,

சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே,

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி,

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி,

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்,

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார்,

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா

ஆகியோரிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசினார்.

இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் :

லாலு பிரசாத் யாதவ் அவர்களின் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. மனோஜ் ஜா அவர்கள் தொலைபேசி வாயிலாகப் பேசினார்.

“சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையடுத்து, முக்கிய அரசியல்கட்சித் தலைவர்களை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு,

1. உடனடியாக, கமிட்டிக் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசை வலியுறுத்துவது

2. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் அளித்துள்ள மருத்துவ இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது

3. மாநில இடஒதுக்கீட்டுச் சட்டங்களைப் பாதுகாப்பது

ஆகிய கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரினேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories