தமிழ்நாடு

ஆவினில் ரூ.8 கோடி கையாடல்: ஆளும் கட்சிக்காரர்கள் உட்பட சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆவின் ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக கூட்டுறவு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

ஆவின் ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் முறைகேடு, கையாடலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக கூட்டுறவு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக கூட்டுறவு சங்கத்தின் பொதுச் செயலாளர் லெனின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தென் மாவட்டங்களில் உள்ள ஆவின் ஊழியர்களுக்கு ஆவின் ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் குறுகிய காலக் கடன், குறுகிய காலக் கடன் வழங்கி லாபம் ஈட்டி 14 சதவீதம் டிவிடெண்ட் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் இந்நிறுவனம் நிதி ஆதாரத்தை பெருக்கும் நோக்கத்துடன் உறுப்பினர் அல்லாதவர்கள், ஓய்வு பெற்ற அரசு மற்றும் ஆவின் ஊழியர்களிடம் நிலைத்த வைப்புத்தொகை பெற்று வந்தது. கடந்த மூன்றுஆண்டுகளாக வைப்புத் தொகை குறித்த முறையான வரவு - செலவு சமர்ப்பிக்கப்பட வில்லை. நிதி கையாடல், முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஆவினில் ரூ.8 கோடி கையாடல்: ஆளும் கட்சிக்காரர்கள் உட்பட சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இந்தப் பிரச்சனை நடவடிக்கை எடுக்க தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், விசாரணை நடத்தப்பட்டு சுமார் 7.92 கோடி ரூபாய் நிதி முறைகேடு, கையாடல் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மதுரை ஆவின் ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் தலைவர், செயலாளர், உதவிச் செயலாளர், கணக்காளர் ஆகிய நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு செயலாளரும், கணக்காளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிதி கையாடல், முறைகேட்டில் நேரடியாக ஈடுபட்ட நபர்கள் மீது ஆளும் கட்சிக்காரர்கள் என்ற பாரபட்சமின்றி யாராக இருந்தாலும் உறுதியான நடவடிக்கை எடுத்து நிதி கையாடல், முறைகேடு செய்தவர்களிடமிருந்து, பணத்தையோ அல்லது சொத்துக்களையோ பறிமுதல் செய்து வைப்பு நிதி தாரர்களுக்கும், ஓய்வுபெற்ற அரசு மற்றும் ஆவின் ஊழியர்களுக்கும், மற்றும் மதுரை ஆவின் ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் சேரவேண்டிய பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டிய கூட்டுறவுத் துறை அதிகாரிகள், முறையாக தணிக்கை மேற்கொள்ளாத கூட்டுறவு தணிக்கை துறை அதிகாரிகள் மீதும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories