தமிழ்நாடு

"மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொலை : இந்தக் கொடூரங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்” - மு.க.ஸ்டாலின் வேதனை!

அறந்தாங்கி அருகே, 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிதைக்கப்பட்ட சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

"மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொலை : இந்தக் கொடூரங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்” - மு.க.ஸ்டாலின் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த நாகூரான், செல்வி தம்பதியரின் 7 வயது மகள் கடந்த ஜூண் 29ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார்.

அச்சிறுமியின் பெற்றோர் எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று மாலை சிறுமியின் வீட்டிற்குப் பின்புறம் தண்ணீர் இல்லாத செடிகள் அடர்ந்த குளத்தில் சிறுமி ரத்தக்காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட சிறுமியின் தலை மற்றும் முகத்தில் ரத்தக் காயங்கள் இருந்ததாகவும் சிறுமியின் உடல் கிடந்த இடத்தின் அருகே ரத்தம் சிதறி இருந்ததாகவும் தகவல் வெளியானது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏம்பல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரிடம் சந்தேகத்தின் பேரில் போலிஸார் விசாரணை நடத்தியதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அடித்துக்கொன்றதாக போலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

"மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொலை : இந்தக் கொடூரங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்” - மு.க.ஸ்டாலின் வேதனை!

இதையடுத்து, ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்த போலிஸார் மேலும், விசாரணை நடத்திவருகின்றனர். 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “கொரோனா பரவலைப் போலவே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்குச் சீர்கேடும் படுவேகமாகப் பரவி வருவது கவலையடைச் செய்கிறது!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயதுச் சிறுமியின் உடல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், இரத்தக் காயங்களுடன் வறண்ட குளம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

ஜூன் 29-ம் தேதி மாலையில் விளையாடச் சென்ற சிறுமி, இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவரது பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் தேடியலைந்து ஜூலை 2-ம் தேதி காலையில் உயிரற்ற உடலினை கண்டெடுத்துள்ளார்கள். ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்புதான், இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்றொரு சிறுமி படுகொலைக்குள்ளானது தாமதமாக வெளியே தெரியவந்தது. இப்போது மீண்டும் ஒரு சிறுமி!

இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. பெண்கள் - சிறுமிகள் - பொதுமக்களின் பாதுகாப்பு மீது அக்கறை காட்டிட வேண்டும்; இத்தகைய கொடூரங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories