தமிழ்நாடு

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை - 5 போலிஸார் கைது; கொலை வழக்குப்பதிந்து CBCID அதிரடி!

வியாபாரிகளான சாத்தான்குளம் தந்தை மகன் கொல்லப்பட்ட வழக்கில் ஐந்து போலிஸாரை கைது செய்த சிபிசிஐடி போலிஸார் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிந்துள்ளனர்.

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை - 5 போலிஸார் கைது; கொலை வழக்குப்பதிந்து CBCID அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜும் பென்னிக்ஸும் போலிஸாரின் அதிகார வன்முறைக்கு இறையாகியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த படுகொலை விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் கண்டனங்களும் போலிஸாரை கைது செய்ய வேண்டும் என்ற தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தன. இதற்கிடையெர் தந்தை மகன் கொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சாத்தான்குளம் போலிஸாரிடம் உரிய விசாரணை நடத்தி கொலை வழக்குப்பதிவு செய்ய நெல்லை சிபிசிஐடி போலிஸுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று காலையிலேயே வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி மாலையிலேயே சாத்தன்குளம் கொலையில் நேரடி தொடர்பில் இருந்த உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் , காவலர்கள் முத்துராஜ், முருகன் கைது செய்யப்பட்டு அதிரடியாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, சாத்தான்குளம் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்நிலயில். தந்தை மகன் கொலைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் தலைமைறைவாக இருந்த எஸ்.ஐ.பாலகிருஷ்ணனும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories