தமிழ்நாடு

“ஜெயராஜ், பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் அடித்த சாத்தான்குளம் போலிஸ்” - தலைமை பெண் காவலர் சாட்சியம்!

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் D.குமார், உடல்பலத்தை காட்டும் அசைவுகளுடன் மிரட்டும் தொனியில் இருந்தார் என கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

“ஜெயராஜ், பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் அடித்த சாத்தான்குளம் போலிஸ்” -  தலைமை பெண் காவலர் சாட்சியம்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலை செய்யப்பட்டதற்கு கடுமையான கண்டனங்கள் எழுப்பப்பட்டதோடு கொலை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துள்ளது. சாத்தான்குளம் கொலை தொடர்பான இன்றைய விசாரணையின் போது கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு நேரடியாகச் சென்று அவர் விசாரணை மேற்கொண்ட போது நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் அறிக்கையாக தாக்கல் செய்திருக்கிறார்.

“ஜெயராஜ், பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் அடித்த சாத்தான்குளம் போலிஸ்” -  தலைமை பெண் காவலர் சாட்சியம்!

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு :

உடல்பலத்தைக் காட்டி மிரட்டும் தொனியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் இருந்தார்.

பதிவேடுகள் குறித்து கேட்டபோது எந்த நகர்வும் இல்லாமல் காவலர்களை ஒருமையில் குமார் அதட்டிக் கொண்டிருந்தார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள CCTV காட்சிகளுக்கு 1 TB நினைவகம் இருந்தும் தானாக அழிந்து போகும் வகையில் திருத்தம் செய்திருக்கிறார்கள்.

ஜெயராஜ், பென்னிக்ஸை கைது செய்த நாளான ஜூன் 19ம் தேதி பதிவான எந்த வீடியோ காட்சிகளும் காவல் நிலைய கணினியில் இல்லை.

காவல் நிலையத்தில் நீதிமன்ற ஊழியர்களை காவலர்கள் கிண்டல் செய்த காரணத்தால் சாட்சியங்களை பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

நேரடி சாட்சியமாக இருந்த தலைமை காவலர் ரேவதி, சம்பவம் நடந்த அன்று இருவரையும் விடிய விடிய காவலர்கள் லத்தியால் அடித்ததால் லத்தி மற்றும் மேஜையில் ரத்தக்கறைகள் படிந்துள்ளது என்றார்.

காவலர்களிடம் லத்திகளை கேட்ட போது, காதில் ஏதும் விழாதது போன்று இருந்தார்கள். கட்டாயப்படுத்திய பிறகு அனைவரும் லத்திகளை அளித்தனர்.

அதில், மகாராஜன் என்பவர் மட்டும் “உன்னால் ஒன்னும் **** முடியாது” எனக் கூறி அசாதாரண சூழலை உருவாக்கினார். மற்றொரு காவலர் லத்தியை கேட்டபோது எகிறி குதித்து தப்பியோடிவிட்டார்.

இவை அனைத்தையும் அங்கிருந்த காவலர்கள் வீடியோவாக பதிவு செய்து நீதிமன்ற ஊழியர்களை மிரட்டிக் கொண்டு இருந்தனர்.

தலைமைக் காவலர் ரேவதியிடம் வெகு நேர பாதுகாப்புக்கு உறுதியளித்த பின் சாட்சி கையெழுத்திட்ட பிறகு புறப்படும் சூழல் உருவானது.

“ஜெயராஜ், பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் அடித்த சாத்தான்குளம் போலிஸ்” -  தலைமை பெண் காவலர் சாட்சியம்!
“ஜெயராஜ், பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் அடித்த சாத்தான்குளம் போலிஸ்” -  தலைமை பெண் காவலர் சாட்சியம்!
“ஜெயராஜ், பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் அடித்த சாத்தான்குளம் போலிஸ்” -  தலைமை பெண் காவலர் சாட்சியம்!
“ஜெயராஜ், பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் அடித்த சாத்தான்குளம் போலிஸ்” -  தலைமை பெண் காவலர் சாட்சியம்!
banner

Related Stories

Related Stories